மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்கென 4 ஆயிரத்து 378 மில்லியன் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் மாணிக்கம் உதயகுமார் தெரிவித்தார்.
அபிவிருத்தி திட்டங்களின் முன்னேற்றங்களை மீளாய்வு செய்யும் மாவட்ட அபிவிருத்தி இணைப்புக்;குழுக்கூட்டம் இன்று (செவ்வாய்க்கிழமை) நடைபெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
இன்றைய அபிவிருத்தி குழுக்கூட்டத்தில், சீன அரசாங்கத்தின் உதவியில் இம்மாவட்டத்தில் சுமார் 70 கோடி ரூபாய் செலவில் நிர்மாணிக்கப்படவுள்ள 6 ஆயிரம் வீடுகள் அமைக்கும் திட்டம், வரவு செலவு திட்ட நிதியில் 6 கோடி ரூபா செலவில் மேற்கொள்ளப்படவுள்ள புதிய வீதி அமைப்பு, பாடசாலை, பொதுநல அமைப்புகளின் உபகரணக் கொள்வனவு அடங்கலான திட்டங்களுக்கும் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.
இதுதவிர இம் மாவட்டத்திற்கு கிடைக்கப்பெற்றுள்ள சுமார் 473 மில்லியன் ரூபா செலவிலான விவசாய அமைச்சின் நவீன முறையிலான விவசாய அபிவிருத்தித்திட்டங்கள், மகிழவெட்டுவான் ஆயித்தியமலை குடிநீர் திட்டம், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் புதிய 155 கிலோமீற்றர் வீதி அமைப்பு,