நாட்டின் பொருளாதார சீரழிவிற்கு ஜனாதிபதியின் தன்னிச்சையான செயற்பாடே முக்கிய காரணமாகும்.20 ஆவது அரசியல் சீர்திருத்தத்திற்கு கைகளை உயர்த்தி ஆதரவு வழங்கியதன் மூலம் தான் மக்கள் சகல பிரச்சினைகளும் ஏற்பட்டிருப்பதாக பலவாறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர் ஐக்கிய மக்கள் சக்தியின் கல்முனைத் தொகுதிக்கான அமைப்பாளர் சட்டத்தரணி எம்.எஸ். அப்துல் றஸாக் தெரிவித்தார்.
சமகால அரசியல் நிலைமை தொடர்பாக அம்பாறை மாவட்டம் கல்முனை பகுதியிலுள்ள ஐக்கிய மக்கள் சக்தி காரியாலயத்தில் புதன்கிழமை(13) மாலை விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது
தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமை காரணமாக அரசாங்கத்திற்கு எதிராக பல போராட்டங்கள் பல தரப்பினரால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.நாட்டின் பொருளாதார சீரழிவிற்கு ஜனாதிபதியின் தன்னிச்சையான செயற்பாடே முக்கிய காரணமாகும்.அது போன்று அரசாங்கத்தின் அனுபவமற்ற பொருளாதார கொள்கையும் ஆகும் என்பதை கூற விரும்புகின்றேன்.ஜனாதிபதிக்கு உள்ள அதிகாரத்தின் காரணமாகவே எவரது ஆலோசனைகளையும் பெறாமல் இப்பொருளாதார நடவடிக்கைகளை முன்னெடுத்ததன் விளைவே இவ்நெருக்கடியாகும்.இந்த அதிகாரங்கள் ஜனாதிபதிக்கு கிடைக்க பெற காரணம் 20 ஆவது அரசியல் சீர்திருத்தம் நிறைவேற்றப்பட்டமையாகும்.
20 ஆவது அரசியல் சீர்திருத்தத்திற்கு கைகளை உயர்த்தி ஆதரவு வழங்கியதன் மூலம் தான் மக்கள் சகல பிரச்சினைகளும் ஏற்பட்டிருப்பதாக பலவாறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.எனவே சிறு கட்சிகளில் இருந்து வருகின்ற பாராளுமன்ற பிரதிநிதிகள் ஒரு கட்சியில் தேர்தல் கேட்டு வெற்றி பெற்று வருவார்கள்.அடுத்த கட்சி வெற்றியீட்டி அரசாங்கம் அமைக்கின்ற போது அதில் இணைந்து பதவிகளை பெற்று வரப்பிரசாதங்களை அனுபவிக்கின்ற நிலையே வரலாறாக உள்ளதை நாம் அறிவோம்.
இச்செயற்பாடு தான் அவர்களது வழமையான செயற்பாடாகும்.ஒரு கட்சியில் நிரந்திரமாக இருப்பதில்லை.கொள்கைகள் எதுவும் அவர்களுக்கு இல்லை.குறிப்பாக சொல்லப்போனால் முஸ்லீம் கட்சிகளிடம் கொள்கைகள் எதுவும் இல்லை என்றே கூறுவேன்.சமூகத்தில் ஒருவன் என்ற ரீதியில் எனது வேண்டுகோள் யாதெனில் உங்கள் சந்ததிகளின் எதிர்காலத்தை பாதுகாப்பதற்கு விரும்பினால் வடகிழக்கினை சேர்ந்த சிறுகட்சிகளுக்கு தேர்தலில் வாக்குகளை வழங்க கூடாது என்பதை முஸ்லீம் மக்களிடையே விசேடமாக கேட்டுக்கொள்கின்றேன்.
மேலும் 20 ஆவது அரசியல் சீர்திருத்தத்திற்கு கைகளை உயர்த்தி ஆதரித்த 7 முஸ்லீம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் எதிர்கால தேர்தலில் வாக்களிப்பதில் இருந்து வடக்கு கிழக்கு மக்கள் மறுபரீசிலனை செய்யுங்கள். கைகளை உயர்த்துவதில் வல்லவர்களான இவ் 7 பாராளுமன்ற உறுப்பினர்களும் மீண்டும் மீண்டும் இவ்வாறான காரியங்களை துணிந்து மேற்கொள்வர்.இதனால் உங்கள் சந்ததிகளின் எதிர்காலம் கேள்விக்குறியாகும் என்பதை தெரிவிக்க விரும்புகின்றேன்.