மக்களின் நன் மதிப்பையும் மரியாதையையும் பெற்ற தலைவரே நாட்டிற்கு அவசியம் என அமைச்சர் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
களனியில் (புதன்கிழமை) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட முறைமை காரணமாக இந்த நாடு தற்போது பின்னோக்கி செல்வதாக இதன் போது சுட்டிக்காட்டிய அவர், இந்நிலைமை காரணமாக நாட்டின் பொருத்தமான தலைவரை என்னும் பெற்றுக்கொள்ள முடியயாத சூழ்நிலை காணப்படுவதாக அமைச்சர் கூறினார்.
மேலும் நாட்டில் சமாதானம், நல்லிணக்கம் மற்றும் வளர்ச்சியை உறுதிப்படுத்த மலேசிய பிரதமர் மகாதீர் பின் முகமது போன்ற தலைவர்கள் அவசியம் எனவும் கூறினார்.
அத்துடன் நாட்டின் பொருளாதாரம் கடந்த 1940 ற்கு பின்னர் குறைந்து விட்டதாகவும் அவர் இதன் போது சுட்டிக்காட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.