இந்தியாவில் இயங்கும் கலாம் உலக சாதனை அமைப்பினால் இணைய வழிமூலம் கடந்த மூன்று மாதங்களுக்கு மூன்பு நடாத்தப்பட்ட மழலைச் செல்வங்களுக்கான போட்டி நிகழ்வில்
பெரியநீலாவணையைச் சேர்ந்த கேஷாந்தன் சபேஜிதா தம்பதிகளின் புதல்வி லிகேஷா ஒன்றரை வயதான இவர் 251 வார்த்தைகள் 14 விலங்குகளின் ஒலிகள் போன்றவற்றை குறிப்பிட்ட நேரத்திற்குள் வேகமாக சொல்லி கலாம் உலக சாதனையை வென்று சாதனை படைத்து பெருமை செய்துள்ளார் .
இவர் 11-செயல்கள் 19-விலங்குகள் 13-பறவைகள் 16 உடல் பாகங்கள் 4-நிறங்கள் 5-பூக்கள் 31-உணவுகள் 12 – பழங்கள் 9 – கடவுள் பெயர்இ 12-பூச்சிகள் 8-தலைவர்களின் பெயர்கள் 14 விலங்குகள் மற்றும் பறவைகளின் ஒலிகள் 83-பொதுவான பொருட்கள் 3-கொடிகள் 8-காய்கறிகள் 11-வாகனங்கள் மற்றும் 6- வாகனங்களின் விளக்கம் மற்றும் 3 பொது அறிவு கேள்விகளுக்கு பதிலளித்துள்ளார்.
எமது நாட்டிற்கும் எமது மண்ணிற்க்கும் பெருமை சேர்த்துள்ளார் இந்த சாதனைக்காக அயராது பாடுபட்ட இவரது பெற்றோர்களது விடா முயற்சியே இவ் சாதனைக்கு வழிவகுத்து இருக்கின்றது. அதே வேளை பாவாணர் அக்கரைப்பாக்கியன் நவமணிதம்பதியினரினதும் சுந்தரமூர்த்தி இராஜேஸ்வரி தம்பதியினரும் பேரப்பிள்ளை என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.