மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள அனைத்து மக்களுக்கு அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கும் வகையில் அரசாங்க அதிபர் க.கருணாகரன் தலைமையில் நேற்று இடம் பெற்ற கூட்டத்தின் போது மாவட்டத்தில் உள்ள 14 பிரதேச செயலங்களிலும் இவ்வட்டை அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
ஒவ்வரு பிரதேச செயலகங்களுக்கும் என ஒவ்வ வர்ணங்களில் இவ்வட்டை அறிமுகப்படுத்தப்பட்டு இதன் மூலமாக அத்தியாவசிய பொருட்களை வழங்குவதற்கு தீர்மாணிக்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மாவட்டத்திற்கு கிடைக்கின்ற அத்தியாவசிய பொருட்களை சகலருக்கும் கிடைக்கின்ற வகையில் பங்கிடுசெய்வதற்கு வசதியாகவு ஒரு குடுப்பத்தில் யாராவது ஒருவர்மட்டும் அட்டையினை பயன்படுத்தவும் எரிவாய்வு என்றால் ஒருமாதத்திற்கு ஒன்று என்ற வகையிலும் எரிபொருள் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலும் மண்னெண்னை குறித்த அளவிலும் வழங்குவதற்கு என நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஒரு பிரதேச செயலகத்தின் நபர் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களில் மாத்திரம் தங்களின் எரிபொருளை கொள்வனவு செய்ய முடியும் எனவும் இன் நடைமுறையானது எதிர்வரும் வாரங்களில் நடைமுறைக்கு வரும் என எதிர்பாக்கப்படுகின்றது.
மக்கள் எரிபொருள் தீர்ந்து விடும் என்ற அச்சத்தில் இரவுவேளைகளில் தங்களின் வாகனங்களை எரிபொருள் நிரப்பு நிலையங்களில் நிறுத்திவிட்டு அதிகாலையில் வந்து மணித்தியாலங்களாக காத்திக்கிடப்பிற்கு இனி தேவை இருக்காது எனலாம்.
எரிபொருட்களை அளவுக்கு அதிகமாவ வீடுகளில் பதிக்கிவைப்பதன் மூலம்தான் இத்தகை தட்டுப்பாட்டிற்கு காரணமாகும் தயவு செய்து மக்கள் தேவைக்கு மாத்திரம் பெற்றுகொண்டு மற்றவர்களும் பெற்றுக்கொள்ளவாய்ப்பு அளிக்குமாறு பொதுமக்களை அரசாங்க அதிபர்கேட்டுகொன்டார்.