97 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று

 மட்டக்களப்பு மாவட்டத்தில் நேற்று (25) மாத்திரம் 97 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி நா.மயூரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 02 பேரும், களுவாஞ்சிகுடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 08 பேரும், வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 04 பேரும், காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 13 பேரும், ஓட்டமாவடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

அத்துடன், கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 11 பேரும், செங்கலடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 02 பேரும், ஏறாவூர் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 09 பேரும், பட்டிப்பளை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஒருவரும், வவுனதீவு சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 11 பேரும், வெல்லாவெளி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 02 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேலும், ஆரையம்பதி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 15 பேரும், கிரான் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 08 பேரும், மேலும் 05 பொலிஸ் உத்தியோகத்தர்களும், மட்டக்களப்பு சிறைச்சாலையில் 05 பேர் உட்பட  மொத்தமாக 97 பேருக்கு தொற்று  கண்டறியப்பட்டுள்ளது.

கடந்த 14 நாட்களில் மாத்திரம் தனியார் ஆடைத் தொழிற்சாலையில் மாத்திரம் 42 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதுடன்,

கொவிட் 19 மூன்றாவது அலையில் 7 நாட்களில் 424 தொற்றாளர்கள் மட்டக்களப்பில் இனங்கானப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts