கிழக்கு மாகாணத்தில் கல்விப்பணி மற்றும் வாழ்வாதார உதவிகளை முன்னெடுத்துவரும் சுவிஸ் உதயம் அமைப்பின் ஊடாக மாணவர்களுக்கான கற்றல் உபகரண மற்றும் புத்தகப்பை வழங்கும் நிகழ்வு 25 ஆம் திகதி சனிக்கிழமை கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட பாண்டிருப்பு நாவலர் வித்தியாலயத்தில் நடைபெற்றது.
பாண்டிருப்பு நாவலர் வித்தியாலயத்தில் மிகவும் வறிய நிலையில் உள்ள தெரிவுசெய்யப்பட்ட 60 மாணவர்களுக்கு புத்தகப் பைகள் வழங்கப்பட்டன.
பாடசாலையின் அதிபர் கே.தியாகராஜா தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் தாய்ச்சங்க பொருளாளர் சமூகசேவகர் கணபதிப்பிள்ளை துரைநாயகம் மற்றும் தாய்ச்சங்க நிர்வாக உறுப்பினராகிய குமாரவேல் தர்மபாலன் சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்கு மாகாணத் தலைவர் மு.விமலநாதன் செயலாளர் திருமதி ரொமிலா செங்கமலன் பொருளாளர் பாவாணர் அக்கரைப்பாக்கியன உபதலைவர் கண.வரதராஜன் மற்றும் உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
சுவிஸ் உதயம் அமைப்பிடம் விடுக்கப்பட்டவேண்டுகோளின் அடிப்படையில் இந்த கற்றல் உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டன.
இதன்போது பாடசாலையில் உள்ள பல்வேறு குறைபாடுகள் சங்கதின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதுடன் அவற்றில் சில குறைபாடுகளை தீர்த்து தருவதாக இங்கு உறுதியளிக்கப்பட்டது.