விடுமுறையிலுள்ள அரச ஊழியர்கள் தேர்தல் நடைபெறும் வரை சேவையில் ஈடுபட முடியாது.தற்போது,

உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக சம்பளமற்ற விடுமுறையிலுள்ள அரச ஊழியர்கள் தேர்தல் நடைபெறும் வரை சேவையில் ஈடுபட முடியாது.தற்போது, தேர்தல் இல்லையென்று குறிப்பிடவில்லை. தேர்தல் பிற்போடப்பட்டுள்ளதாகவே அறிவிக்கப்பட்டுள்ளதாக தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

மேலும், அரச ஊழியர்கள் தேர்தல் நிபந்தனைகளுக்கு உட்பட்ட வகையிலேயே தேர்தலில் போட்டியிட தீர்மானித்தனர்.எனவே உள்ளூராட்சித் தேர்தல் நடைபெறும் வரை சம்பளமில்லாத விடுமுறையில் சென்றோர், அரச சேவையில் ஈடுபட முடியாது என்றும் குறிப்பிட்டுள்ளார்.உள்ளூராட்சித் தேர்தலில் போட்டியிடுவதற்காக சம்பளமில்லாத விடுமுறையில் சென்றுள்ள அரச ஊழியர்கள் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.மேலும், அரச ஊழியர்கள் தேர்தலில் போட்டியிட வேண்டுமாயின், அவர்கள் மூன்று மாத காலம் சம்பளமில்லாத விடுமுறை என்ற அடிப்படையில் சேவையிலிருந்து இடை விலக வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்த ஆண்டு நடைபெறவுள்ள உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கு சம்பளமில்லாத விடுமுறையில் சுமார் 7100 இற்கும் அதிகமான அரச ஊழியர்கள் வேட்புமனு தாக்கல் செய்துள்ள பின்னணியில் அரச ஊழியர்கள் தொடர்பில் உடனடியாக தீர்மானத்தை எடுக்குமாறு பிரதமருமான தினேஷ் குணவர்தனவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

Related posts