பிரதேச செயலாளர் T.J.அதிசயராஜ் அவர்களுக்கு அழைப்பு விடுக்காமல் புறக்கணித்தமையானது ஒட்டுமொத்த கல்முனை  தமிழர்களையும் அவமதிக்கும் ஓர் செயலாகவும்

அம்பாறை மாவட்ட காணித் திணைக்களத்தினால் நடாத்தப்படும் ‘காணிக்கு குருநாதன்’ எனும் கௌரவிப்பு நிகழ்வில் கல்முனைத் தமிழர்களுடைய தலைமகனாக விளங்கக்கூடிய கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தினுடைய பிரதேச செயலாளர் T.J.அதிசயராஜ் அவர்களுக்கு அழைப்பு விடுக்காமல் புறக்கணித்தமையானது ஒட்டுமொத்த கல்முனை  தமிழர்களையும் அவமதிக்கும் ஓர் செயலாகவும், இனவாதிகளின் மற்றுமொரு திட்டமாகவும் பார்க்கத் தோன்றுகின்றது என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் அம்பாறை மாவட்டம் அமைப்பாளர் புஸ்பராஜ் துஷானந்தன் தெரிவித்துள்ளார்.

நாளைய தினம் இடம்பெறவுள்ள மேற்குறித்த நிகழ்வுக்கு மாவட்டத்தின் ஏனைய பிரதேச செயலாளர்களுக்கு அழைப்பு விடப்பட்டிருக்கின்ற நிலையில் கல்முனை வடக்குப் பிரதேச செயலாளருக்கு மாத்திரம் அழைப்பு மறுக்கப்பட்டமைக்கு எதிராக விடுக்கப்பட்ட கண்டன அறிக்கையிலே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

குறித்த இந்த நிகழ்விற்கு  வெகு தூரத்தில் இருக்கும் ஏனைய பிரதேச செயலாளர்களுக்கு எல்லாம் அழைப்பு விடுக்கப்பட்டிருக்கின்றது.  ஆனால், கல்முனையில் தமிழர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் வடக்கு பிரதேச செயலகத்தினுடைய பிரதேச செயலாளருக்கு அழைப்பு விடுக்காமையானது பெருத்த சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது. தமிழர்கள் மத்தியில் வடக்கு பிரதேச செயலகம் என்ற ஒன்று இங்கு இல்லை என்பதனை வெளி உலகிற்கு காட்டுவதற்காகவே திட்டமிட்ட ரீதியில் தெற்கு பிரதேச செயலாளர் மாத்திரம் அழைக்கப்பட்டிருக்கின்றார் ஆகவே இந்த நிகழ்வினை கண்டித்து குருநாதன் ஐயா மற்றும் 

Related posts