கல்முனைப் பிரதேசத்தில் வீதியில் தனிமையில் செல்லும் பெண்களிடம் பாலியல் ரீதியில் சேஷ்டைகள் விடும் நபர்களின் தொல்லைகள் அதிகரித்துள்ளதால் மாணவிகள், பெண்கள் வீதியில் நடமாட அச்சம் தெரிவிக்கின்றனர்.
சமீபகாலமாக கல்முனை தமிழ் பிரதேச செயலகப்பிரிவிற்குட்பட்ட கல்முனை, பாண்டிருப்பு, பெரியநீலாவணை, நற்பிட்டிமுனை. சேனைக்குடியிருப்பு போன்ற தமிழ்க்கிராமங்களில் வெளியிடங்களில் இருந்து வியாபார நோக்கோடு உள் நுழையும் மாற்று இனத்தவர்களினாலே வீதியில் செல்லும் பெண்கள் பாலியல்ரீதியிலான சேஷ்டைகளுக்குள்ளாக்கப்படுகின்றனர்.
தேவைகள் நிமிர்ததம் வெளிச்செல்லும் பெண்களின் பின்னால் தொடரும் நபர்கள் பெண்களிடம் அங்கசேஷ்டைகள்; புரிவதுடன் தகாதவார்தைப் பிரயோகங்களையும் பேசிவருகின்றனர். அத்துடன் தமது ஆடைகளை களைந்து ஆண் உறுப்புக்களை காட்டிவிட்டு ஒடி மறைகின்றனர்.
இவ்வாறான சம்பவம் பாண்டிருப்பு, கல்முனை, பெரியநீலாவணை ஆகிய இடங்களில் இடம்பெற்றள்ளது. வயது வித்தியாசமின்றி இச்சேட்டைகளில் ஈடுபட்டுவருகின்றனர். இவ்வாறான சேஷ்டைகளில் ஈடுபடுபவர்கள் மது, கஞ்சா போன்ற போதைப்பொருட்களை பாவித்தநிலையிலே காணப்படுவதாக பாதிக்கப்பட்ட குடும்பப்பெண்கள் தெரிவித்தனர்.
மாலைநேரங்களில் பிரத்யேக வகப்புக்களுக்குச் செல்லும் மாணவிகளிடமும் சேஷ்டைகள் விடுவதாக தெரிவிக்கப்படுகின்றது. அதிகமாக மாலைநேரங்களிலும், நண்பகல்வேளையிலும், ஆட்கள் நடமாட்டமற்ற பகுதிகளிலும் பெண்கள் மீதான பாலியல் சேஷ்டைகள் அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.