கிட்டத்தட்ட ஒரு வருட கால எனது முயற்சியின் அடிப்படையில் அமெரிக்க தூதரகத்தின் US Embassy இன் அனுசரணையுடன். கடந்த 5ம், 6ம், 7ம் திகதிகளில் தம்புள்ளையில் International Republican Institute (IRI) எனும் நிறுவனம் நடாத்திய செயலமர்வொன்று நடைபெற்றது. இச் செயலமர்வானது இலங்கைத் தமிழரசுக் கட்சியினுடைய உறுப்பினர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. பொதுஜன பெரமுன, ஐக்கிய மக்கள் சக்தி என்பனவற்றுக்கு இவ்வாறான செயமர்வுகள் மேற்கொள்வதனைப் போன்று எமது தமிழரசுக் கட்சிக்கும் இவ்வாறான செயலமர்வினை நடாத்த வேண்டுமென ஒரு வருட காலத்திற்கும் மேலாக கோரிக்கை முன்வைத்தேன். அதற்கான அனுமதியும் கிடைக்கப் பெற்றது. அந்த வகையில் வடக்கு மற்றும் கிழக்கில் காணப்படும் எட்டு மாவட்டங்களும் அதனுடன் கொழும்பு மாவட்டத்திலும் உள்ள எமது கட்சியினுடைய உறுப்பினர்களுக்கான செயலமர்வு மேற்கொள்ளப்பட்டது. கட்சியினுடைய மனித உரிமைகள் மற்றும் பிரதானமான இலக்குகள், பொறுப்புக் கூறலும் அரசியல் தீர்வும் போன்ற விடயங்களும் இச் செயலமர்வில் பேசப்பட்டன. அந்த வகையில் முதல் நாளில் பொறுப்புக் கூறல் விடயம் தொடர்பாகவும், இரண்டாவது நாளில் அரசியல் தீர்வு தொடர்பான அரசியலமைப்பு சார்ந்த செயலமர்வும், இவை இரண்டு விடயங்களையும் வைத்து எதிர்காலத்தில் எமது கட்சிக்கு தேர்தலின் போது பிரச்சாரம் மேற்கொள்வதற்காக Facebook மற்றும் ஏனைய சமூக வலைத்தளங்கள் சம்மந்தமான பயிற்சிகளும் வழங்கப்பட்டன. இதற்கான தெரிவுகள் மாவட்ட மட்டத்தில் காணப்படும் பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அங்குள்ள தலைவர்களுடனும் கலந்துரையாடி அச் செயலமர்வில் பங்குபற்றாளர்கள் தெரிவு செய்யப்பட்டனர். இறுதி நிகழ்வில் Dr. சத்தியலிங்கம் (இலங்கைத் தமிழரசுக் கட்சி பொதுச் செயலாளர்) அவர்கள் கலந்து கொண்டார்.
Related posts
-
சுவிஸ் உதயம் கிழக்கு அமைப்பின் மாதாந்த நிருவாக சபைக்கூட்டம்
சுவிஸ் உதயம் கிழக்கு அமைப்பின் மாதாந்த நிருவாக சபைக்கூட்டம் பெரியபோரதீவு எரிபொருள் நிரப்பு நிலையத்தில் அமைந்துள்ள அமைப்பின் உப காரியாலயத்தில் அமைப்பின்... -
அம்பாறை மாவட்டத்தில் 555,432 பேர் வாக்களிக்கத் தகுதி-மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அலுவலர் தெரிவிப்பு
அம்பாறை மாவட்டத்தில் ஜனாதிபதி தேர்தலுக்கான அனைத்து ஏற்பாடுகளும் பூா்த்தி செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபரும் தெரிவத்தாட்சி அலுவலருமான சிந்தக அபேவிக்ரம குறிப்பிட்டார்.... -
சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்கு மாகாணக் கிளையின் விஷேட நிர்வாக சபைக்கூட்டம்
சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்கு மாகாணக் கிளையின் விஷேட நிர்வாக சபைக்கூட்டம் அமைப்பின் தலைவர் ஓய்வுநிலை பிரதிக்கல்விப்பணிப்பாளர் மு.விமலநாதன் தலைமையில்...