திருகோணமலை – கந்தளாய் பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற மோதலில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
குறித்த பகுதியில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சி ஒன்றினை கண்டுகழிக்கச் சென்ற இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியதனாலேயே இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது இரத்தினபுரி – ஓப்பனாயக்க – அகறல்ல – படதுர என்ற பகுதியைச் சேர்ந்த ஜெயசிங்ஹ லால் குமார என்ற 31 வயதுடைய ஒருவர் மீது கத்திக்குத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
காயமடைந்த நபர் சிகிச்சைகளுக்காக திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.
இந்தநிலையில் குறித்த மோதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்களை கைது செய்வதற்குரிய நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.