எதிர்வரும் சில நாட்களில், மத்திய, ஊவா மற்றும் கிழக்கு மாகாணங்களில், 50 மில்லிமீற்றர் அளவிலான கடுமையான மழை பெய்யக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளன என்று, வளிமண்டலவியல் திணைக்களம் நேற்று அறிவித்துள்ளது.
இடியுடன் கூடிய மின்னலுடன், கடுமையான காற்றுவீசக்கூடும் என்றும் எதிர்வுகூறப்பட்டுள்ளது.
எனவே, நீர்கொழும்பு, காலி, ஹம்பாந்தோட்டை ஊடான புத்தளம் தொடக்கம் பொத்துவில் வரையான கடலோரங்களில் பணிகளில் ஈடுபட்டுள்ள கடற்படையினர் மற்றும் தொழிலில் ஈடுபட்டுள்ள மீனவர்கள், மிகுந்த அவதானத்துடன் செயற்படவேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இதேவேளை, யாழ்ப்பாணம், வவுனியா, கிளிநொச்சி, மன்னார், முல்லைத்தீவு, குருநாகல், அநுராதபுரம் மற்றும் அம்பாறை மாவட்டங்களுக்குளட்ட 102, 303 குடும்பங்களைச் சேர்ந்த 320,295 பேர் வரட்சியால் பாதிக்கப்பட்டுள்ளனர்.