கிழக்கிலங்கையின் பூர்வீக வரலாற்று காலம் தொட்டுதேரோடும் ஒரே ஆலயமும் இரண்டாயிரத்து அறுநூறுவருடங்கள் பழைமைவாய்ந்த தானாக தோன்றியசிவலிங்கம் அருள் பாலிக்கும் மட்டக்களப்பு மாவட்டம்படுவான்கரை பெருநிலம் மண்முனை தென்மேற்குபிரதேசத்தின் கொக்கட்டிச்சோலை ஊரில் கோயில்கொண்ட ஶ்ரீ தான்தோன்றீஷ்வரர் ஆலயத்தின் இவ்வருட(2018) மகோற்சவ திருவிழாவும், தேரோட்டப்பெருவிழாவும்.
எதிர்வரும் செப்டம்பர் மாதம் (10/09/2018) திங்கள் கிழமை இரவு முழுவதும் கிராம சாந்தி பூசை ஆரம்பமாகி (11/09/2018)செவ்வாய் கிழமை
அதிகாலை 4, மணியளவில் கொடியேற்றத்துடன்உற்சவம் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்து 09,நாட்கள்19/09/2018, வரை ஆலயத்திருவிழாக்களும்
20/09/2018, தொடக்கம் 29/09/2018 வரை பத்து பூர்வீககுடித்திருவிழாக்களும் இடம் பெற்று 30/09/2018, ஞாயிறு பி.ப4, மணிக்கு தேரோட்ட பெருவிழாவும் இடம்பெற்று அன்றுஇரவு திருவேட்டை விழாவும் மறுநாள் காலைதீர்த்தோற்சவத்துடன் இவ்வருட மகோற்சவ உற்சவபெருவிழா இனிதே நினைவுறும்.
குடித்திருவிழா விபரம்:
(1).20/09/2018,வியாழக்கிழமை, பொன்னாச்சிகுடி திருவிழா.
(2).21/09/2018,வெள்ளிக்கிழமை , திடகன் குடி திருவிழா.
(3).22/09/2018,சனிக்கிழமை சஷ்டி குடி திருவிழா.
(4),23/09/2018,ஞாயிற்றுக்கிழமை பெத்தான்குடி திருவிழா.
(5),24/09/2018,திங்கள்கிழமை கோப்பி குடி திருவிழா.
(6).25/09/2018,செவ்வாய்கிழமை கச்சிலாகுடி திருவிழா.
(7).26/09/2018,புதன்கிழமை பணிக்கொணா குடி திருவிழா,
(8).27/09/2018,வியாழக்கிழமை படையாட்சி குடி திருவிழா,
(9).28/09/2018,வெள்ளிக்கிழமை கலிங்ககுடி திருவிழா.
(10).29/09/2018,சனிக்கிழமை உலகிப்போடி குடி திருவிழா.
30/09/2018, ஞாயிற்றுக்கிழமை பி.ப 4, மணி
#தேரோட்டப்பெருவிழா.
அன்று இரவு 7, மணிக்கு திருவேட்டை விழா.
01/10/2018, திங்கள்கிழமை மு.ப 6, மணி தீர்தோற்சவம்.
#கொக்கட்டிச்சோலை சிவன் கோயில் தேரோட்டம் என்பதுஇரண்டு தேர்கள் (வினாயகர் தேர்,சித்திரத்தேர், சிவன்உமை)வடம்பிடித்து ஆண் அடியார்கள் மட்டுமேஇழுக்கும் அபூர்வமான பக்தி பரவசம் ஊட்டும் நிகழ்வாகும்.
கிழக்கு மகாணத்தில் தேரோட்டம் என்றால் அதுகொக்கட்டிச்சோலை சிவன் கோயில் என்பது வரலாற்று உண்மை.
அடியார்கள் அனைவரும் ஆலயத்துக்கு வருகை தந்தை அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகரமாம் கொக்கட்டிச்சோலை ஶ்ரீ தான்தோன்றீஷ்வரர் ஆலய வருடாந்த மகோற்சவ திருவிழா மற்றும் தேரோட்டப்பெருவிழா,திருவேட்டைவிழா அனைத்தையும் கண்டு களித்து எம்பெருமான் அருள் கடாக்சம் பெற்றேகுமாறு ஆலய வண்ணக்குமார் மற்றும் பரிபாலன சபையினர் அன்பாக அழைக்கின்றனர்.