மட்டக்களப்பு வலயக்கல்வி அலுவலகத்திற்குட்பட்ட கல்லடி விவேகானந்தா மகளீர் கல்லூரியின் விளையாட்டு மாணவர்களின் நன்மை கருதியும்,பாடசாலையின் விளையாட்டுகளை ஊக்குவித்து தரமான விளையாட்டு வீராங்கனைகளை உருவாக்கும் நோக்குடன் கல்லூரிக்கு சிவானந்தா வித்தியாலய லண்டன் பழைய மாணவர்மன்றத்தினால் ஒருதொகுதி விளையாட்டுக் உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டது
கல்லூரியின் முன்னாள் அதிபர் திருமதி.திலகவதி ஹரிதாஸ் அவர்கள் பாடசாலைமீது வைத்துள்ள பற்றுதியாலும்,கல்லூரி மாணவர்கள்மீது வைத்துள்ள நல்லெண்ணத்தினாலும் மட்டக்களப்பு மாவட்டத்திற்கு வருகை தந்த சிவானந்தா வித்தியாலய லண்டன் பழைய மாணவர்மன்ற உபதலைவர் ந.கிரிதரன் அவர்களிடம் பாடசாலையின் பாடவிதான, இணைப்பாட விதான வளர்ச்சியை அதிகரிக்கும் நோக்கில் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக ரூபா 42,200 பெறுமதியான காலணி உபகரணங்கள் கொள்வனவு செய்யப்பட்டது.
இக்கல்லூரி மாணவர்கள் நடைபெற்ற மட்டக்களப்பு வலயமட்ட விளையாட்டுப்போட்டியில் தொடர்ச்சியாக 6 வருடங்கள் விளையாட்டுப்போட்டிகளில் பங்குபற்றி சம்பியனாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
இவ்வாறு கொள்வனவு செய்யப்பட்ட உபகரணங்களை முன்னாள் அதிபர் திலகம் திருமதி. திலகவதி ஹரிதாஸ் பாடசாலையின் தற்போதைய அதிபர் திருமதி. பிரபாகரி இராஜகோபாலசிங்கத்திடம் உத்தியோகபூர்வமாக இன்று திங்கட்கிழமை(10.9.2018) காலை 9.00 மணியளவில் கைளித்துள்ளார்.இந்நிகழ்வில் பிரதியதிபர்களான பீ.அமிர்தலிங்கம்,திருமதி.பவளசா ந்தி பிறேமகுமார்,உடற்கல்வி ஆசிரியை செல்வி நிமித்திக்கா ,ஆசிரியர்கள் கலந்துகொண்டார்கள்.
“செறிவுடைய வளங்கள் கொண்டு அறிவுடைய சமூகத்தை உருவாக்குவோம்” என்பதுதான் ஒவ்வொரு கல்விச் சிந்தனையாளர்களின் எண்ணமாகும்.இதற்கிணங்க இக்கைங்கரியத்தை மனம்கோணாது மனநிறைவுடன் ஒழுங்குபடுத்தி தந்துதவிய சிவானந்தா வித்தியாலய பழைய மாணவர்மன்ற உபதலைவர் ந.கிரிதரன் மற்றும் பழைய மாணவர்மன்றத்தினருக்கும் இதயம்கணத்த நன்றிகளை கல்லடி விவேகானந்தா மகளீர் கல்லூரியின் முன்னாள் அதிபர் திலகம் திருமதி. திலகவதி ஹரிதாஸ் மற்றும் கல்லூரியின் தற்போதய அதிபர் திருமதி.பிரபாகரி இராஜகோபாலசிங்கம் தலைமையிலான நிருவாகத்தினர் தெரிவிக்கின்றார்கள்.