ஆசிரியர்கள் வங்கிகளில் பெற்ற கடன்களை வட்டியற்ற கடன்களாக மாற்ற கல்வி அமைச்சு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வங்கிக் கடன்களால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர்ஆசிரியர்களின் நலன்களில் அக்கறை கொண்டுள்ள கல்வி அமைச்சு வங்கிக் கடன்களைப் பெற்று அதனைச் செலுத்த முடியாதுள்ள ஆசிரியர்களது வங்கிக் கடன்களை வட்டியற்ற கடன்களாக மாற்றுவதற்கு நடவடிக்கை எடுத்து உதவ வேண்டும் என பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர்
பாடசாலைகளில் மாணவர்களுக்குக் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்கள் பலர் தமது அடிப்படைத் தேவைகளின் நிமித்தம் வங்கிகளில் பெற்ற கடன்களை மீளச் செலுத்த முடியாது பிரச்சினைக்கு முகம் கொடுத்து வருகின்றார்கள்.
ஆசிரியர்கள் பெறும் சம்பளத்தின் பெரும் பங்கு வங்கிக் கடன்களுக்காகவே செலுத்தப்படுவதால் அவர்களது வாழ்க்கைச் செலவுகளைக் கவனிக்க முடியாது பலர் குழப்பமடைந்து செய்வதறியாது தவித்து வருகின்றார்கள்
வங்கிகளில் தமது அடிப்படை வாழ்வியல் தேவைகளுக்காகப் பெற்ற கடனுக்காக வங்கிகள் பெருமளவான வட்டி வீதத்தினை அறவிட்டு வருகின்றதுஇதனால் தாம் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், வங்கிகளின் அதிகரித்த வட்டி வீதத்தால் ஆசிரியர்கள் பெற்ற கடன் தொகையின் இரண்டு மடங்கிற்கும் அதிகமான தொகையை செலுத்த வேண்டியுள்ளமையால் ஆசிரியர்களின் மாதாந்தச் சம்பளத்திலிருந்து பெருமளவு தொகை வங்கிகளுக்குச் செலுத்தப்படுகின்றது.ஆசிரியர்களின் சம்பளப் பணத்தின் பெரும்பங்கு பணம் ஆசிரியர் பெற்ற வங்கிக் கடனுக்கான வட்டியாகவே செலுத்தப்படுவதாகவும் மிகமிகச் சிறிதளவு பணமே எஞ்சுவதாகவும் வங்கிக் கடன்களால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் கவலை தெரிவிதுள்ளனர்