நாவிதன்வெளி பிரதேசசபை ஊழியரை வழிமறித்து அவரது தாலிக்கொடி கொள்ளை –நாவிதன்வெளிப்பகுதியில் சம்பவம்

கல்முனை நாவிதன்வெளி பிரதேசசபையில் கடமையாற்றும் உத்தியோகத்தர் வீதியால் வரும்போது அவரை வழி மறித்து தாலிக்கொடியை திருடிச் சென்றுள்ள சம்பவம் 13 ஆம்திகதி வியாழக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளதாக பெலிஸார் தெரிவித்தனர்

இது தொடர்பாக மேலும் தெரியவருகையில் சவளக்கடைப் பொலிஸ்பிரிவுக்குட்பட்ட நாவிதன்வெளிக் கிராமத்தினைச் சேர்ந்தவரும் நாவிதன்வெளி பிரதேசசபையில் முகாமைத்துவ உதவியாளராகக் கடமையாற்றும் இப் பெண்  நாவிதன்வெளியில் தனது வீட்டிற்குச் சென்று தனது கைக்குழந்தைக்கு பால் அருந்தக் கொடுத்துவிட்டு; மீண்டும் 2.30 மணியளவில் கடமைக்குச் திரும்பிச்செல்லும் வழியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது

அதாவது நாவிதன்வெளி சவளக்கடை வீட்டுத்திட்டப்பகுதியால்  அப்பெண் மோட்டார் சைக்கிலில் செல்லும்போது அவரை மூவர் வழிமறித்து அவர் அணிந்திருந்த 10 பவுண்  தங்கத்தாலியினைத் திருடிவிட்டுச்சென்றுள்ளனர்.இது தொடர்பாக சவளக்கடைப் பொலிசார் மேலதிக விசாரணையினை மேற்கொண்டுவருகின்றனர்

Related posts