களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு -கல்முனை நெடுஞ்சாலை வீதிகளில் நடமாடும் கட்டாக்காலிகளை பிடித்தும்,கட்டாக்காலி உரிமையாளர்களுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கையை மேற்கொள்ளப்படும் களுதாவளை பிரதேச தவிசாளர் ஞா.யோகநாதன் தெரிவித்தார்.
களுதாவளை பிரதேசசபையின் எல்லைக்குட்பட்ட நெடுஞ்சாலை வீதிகளில் தொடச்சியாக கட்டாக்காலிகள் நடமாடி விபத்துக்களை ஏற்படுத்துகின்றது.இவ்விடயமாக அவரிடம் புதன்கிழமை(19) கேட்டபோதே இவ்வாறு தெரிவித்தார்.
களுதாவளை பிரதேசசபை தவிசாளர் ஞா.யோகநாதன் குறிப்பிடுகையில்:- தமது பிரதேச சபைக்குட்பட்ட பகுதிகளில்,நெடுஞ்சாலை வீதிகளில் கட்டாக்காலிககளை அதன் உரிமையாளர்கள் முறையாக கட்டிப் பராமரிக்க வேண்டும்.அவ்வாறு முறையாக கட்டி பராமரிக்காமல் வீதிகளில் கட்டாக்காலிளாக விட்டால் அவற்றைப் எமது உத்தியோகஸ்தர்களும்,பொலிசாரும் இணைந்து பிடித்து நீதிமன்றில் ஆஜர்படுத்தி 5000 தண்டப்பணம் செலுத்துவதற்கு எண்ணியுள்ளோம்.இவ்விடயமாக அண்மையில் நடைபெற்ற பிரதேச அபிவிருத்தி குழுக்கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.இதற்கு களுவாஞ்சிகுடி பொலிஸ் பொறுப்பதிகாரி,போக்குவரத்து பொலிசார் இணக்கம் தெரிவித்துள்ளார்கள்.எனவே கட்டாக்காலி உரிமையாளர்கள் தங்களின் கால்நடைகளை முறையாக பராமரிப்பதில் தொடர்ச்சியாக அலட்சியப்போக்கை கடைப்பிடிப்பது தவிக்கப்படவேண்டும்.தங்களின் எல்லைக்குள் முறையான பராமரிப்புக்களுடன் தங்களின் கால்நடைகளையும்,கட்டாக்காலிகளை
குறித்த பிரதேச சபையின் எல்லைக்குள் கட்டாக்காலிகள்,கால்நடைகள் பொதுமக்களின்மீது விபத்துக்களை ஏற்படுத்துகின்றது.இதனால் உயிரிழப்புக்களும்,காயங்களும் ஏற்படுகின்றது.விபத்துக்கள் ஏற்படுவதினால் மாவட்டத்தில் ஊனமுற்றவர்களின் தொகை அதிகரித்துக்கொண்டு செல்வதை எம் சமூகத்தினரும்,கட்டாக்காலிகள் வைத்திருப்போரும்,வாகனச்சாரதி