மட்டக்களப்பு உன்னிச்சை பிரதேசத்திலிருந்து கால்நடைகளை கொண்டுசெல்வதற்கான அனுமதிகள் இல்லாமல் கடத்திவரப்பட்ட பதினொரு மாடுகளை அம்பாறை சவளக்கடை பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலை அடுத்து எஸ்.ஐ.ரீ. மேனன் தலமையிலான பொலிஸ் குழுவினரே சட்டவிரோதமாக மாடுகளை கடத்தியவர்களை கைதுசெய்ததுடன், மாடுகளை பறிமுதல் செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் கடந்த இரு தினங்களுக்கு முன்பும் பதினெழு பசுக்கள் கடத்திவரப்பட்டு நீதி மன்றில் ஆஜர்ப்படுத்தப்பட்டதாகவும், மாடுகள் அண்மைக்காலங்களாக திருடப்படுவதால் பொலிஸார் விரைந்து கைது நடவடிக்கைகளை மேற்கொள்வதாக ரகசிய குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி எஸ்.ஐ. ரீ.மேனன் தெரிவித்துள்ளார்.
இவ்வாறு கடத்தப்படும் மாடுகளை மர்ம நபர்கள் இறைச்சிக்காக பயன்படுத்துகிறார்கள் என பிரதேச வாசிகள் கவலை வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.