ரூபாவின் வீழ்ச்சியைக் கட்டுப்படுத்துவதற்காக இன்று நள்ளிரவு முதல் அமுலாகும் வகையில் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான வாகன இறக்குமதி அனுமதிப்பத்திரங்கள் வழங்கும் செயற்பாடு ஒரு வருட காலத்திற்கு இடைநிறுத்தப்பட்டுள்ளது.
நிதி மற்றும் ஊடக அமைச்சினால் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையிலேயே குறித்த விடயம் தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமைச்சுக்கள், திணைக்களங்கள், கூட்டுத்தாபனங்கள் மற்றும் மன்றங்களுக்கான வாகனங்களைக் கொள்வனவு செய்யும் செயற்பாடுகள் மீள் அறிவித்தல் வழங்கும் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் குறித்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன், அரச ஊழிர்களுக்கு வழங்கப்பட்ட அனுமதிப் பத்திரங்களுக்கு அமைய வாகனங்கள் இறக்குமதி செய்யப்படும் செயற்பாடு 6 மாதங்களுக்கு இடைநிறுத்தப்பட்டுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு ஹைபிரிட் வாகனங்களை கொள்வனவு செய்வதற்காக அதன் பெறுமதிக்கு கடன்பெறக்கூடிய சதவீதம் 70 சதவீதத்திலிருந்து 50 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.
மற்றும் பஸ், பாரஊர்தி அல்லாத வாகன இறக்குமதிக்கு 200 சதவீத காசும் குளிரூட்டி, தொலைகாட்சி, கைபேசி இறக்குமதிக்கு 100 சதவீத காசும் இல்லையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.