வன்னியில் முஸ்லீம் மக்களின் ஆக்கிரமிப்பை தடுத்து நிறுத்துவது யார் என்ற கேள்வி எழுவதாக முன்னாள் பிரதி அமைச்சரும் ஐனநாயக மக்கள் காங்கிரசின் தலைவருமான பிரபா கணேசன் தெரிவித்துள்ளார்.
வவுனியாவில் (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற மக்கள் சந்திப்பொன்றில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அங்கு தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘நான் கொழும்பில் இருந்து வந்திருந்தாலும் இந்த வன்னி மாவட்டத்திலே ஒரு அலுவலகத்தை உருவாக்கியுள்ளதுடன், வவுனியா மாவட்டத்திலே ஒரு வாக்காளராவதற்கான விண்ணப்பத்தையும் கொடுத்துள்ளேன்.
ஆனால் உங்களுடைய வாக்குகளைபெற்று மாகாண சபை, நாடாளுமன்றம் சென்றோர் கொழும்பிலே தங்கியிருக்கிறார்களே தவிர இங்குள்ள பிரச்சினைகளை பார்பதில்லை.
எமது சகோதரர் ஒருவர் தாக்கப்பட்டபோது அனைவரும் ஆர்பாட்டம் செய்து, விளம்பரப்படுத்தி விட்டு போய்விட்டார்கள். ஆனால் அந்த குடும்பஸ்தரை விடுவிப்பதற்காக பல நடவடிக்கைகளை நாமே எடுத்திருந்தோம்.
வன்னி மாவட்டத்திலே அனைத்து பகுதிகளுக்கும் சென்று மக்களுடைய பிரச்சினைகளை நேரடியாக பார்த்த பின்பு தான் இங்கு எனது அரசியல் பிரவேசத்தை ஊர்யிதப்படுத்தியிருக்கின்றேன்.
இங்கு ஒரு வேளை சாப்பாட்டிற்கே வழியில்லாத மக்கள் பலர் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். சரியான கல்வி இல்லை, சுகாதார சேவைகள் இல்லை. மக்களிற்கான குடிநீர் இல்லை. வேலை இல்லை.
இன்று வன்னி மாவட்டத்திலே வேலை வாய்புக்களை நோக்கினால் அனைத்தும் ஏனைய இனத்தவர்களிற்கே செல்கின்றது. வீட்டு திட்டங்கள் கூட முஸ்லீம் மக்களிற்கே செல்கின்றது.
முஸ்லீம் மக்களிற்கு கொடுக்கப்படும் வீட்டு திட்டங்களில் சில வீடுகளே வவுனியா மாவட்ட முஸ்லீம்களுக்கு கிடைக்கின்றது. ஏனையவை குருநாகல், கம்பஹா மாவட்டங்களில் இருக்கும் முஸ்லீம் குடும்பங்களிற்கே வழங்குகின்றனர்.
அவர்களை இங்கு அழைத்து வந்து வாக்காளர் அட்டைகளை பதிவு செய்து விட்டு மீண்டும் உங்களது ஊருக்கு செல்லுங்கள் தேர்தல்கள் என்று வந்தால் எமக்கே வாக்கழிக்க வேண்டும் என்று கூறுவார்கள் இங்கே உள்ள அமைச்சர்கள்.
இதனால் வன்னியில் பல வீடுகள் யாரும் இல்லாமல் மூடியே கிடக்கின்றது’ என தெரிவித்துள்ளார்.