சுற்றுலாத்துறை என்றால் துஷ்பிரயோகம் நிறைந்த ஒன்று என்கின்ற கருத்து சாதாரண மக்களிடம் உண்டு. இது பிழையான எண்ணக்கருவாகும். நாட்டின் கௌரவத்திற்கும் பொருளாதாரத்திற்கும் பங்களிப்புச் செலுத்துகின்ற துறையே சுற்றுலாத்துறையாகும்.இதனை மக்கள் மயப்படுத்த வேண்டிய பொறுப்பு ஊடகத்துறையினருக்கு உண்டு
இவ்வாறு சப்ரகமுவ பல்கலைக்கழக சுற்றுலா முகாமைத்துவப் பேராசிரியர் எம்.எஸ்.எம்.அஸ்லம் தெரிவித்துள்ளார்.
ஈ.எல்.லைப் S4IG நிகழ்ச்சித்திட்ட குழுமத்தின் பணிப்பாளர் பிரசாத் ஜயசிங்க தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வில் குழுமத்தின் திட்ட இணைப்பாளர் எம்.எஸ்.எம்.சாமிர்-அம்பாரை மாவட்ட திட்ட உத்தியோகத்தர் அர்சத் இஸ்மாயில் ஆகியோரும் நிகழ்ச்சித் திட்டம் தொடர்பில் விளக்கமளித்தனர்.
இதில் தொடர்ந்து உரையாற்றிய பேராசிரியர்
சுற்றுலாத்துறை முன்னேற வேண்டுமென்றால் மக்களின் ஒத்துழைப்பு அவசியமாகும். மக்கள் விரும்புகின்றஇ அவர்களுடன் ஒன்றிணைந்துள்ள அம்சங்களை இணைத்து அதனை மேம்படுத்த சுற்றுலாத்துறை முனைகின்ற போது இத்துறையை மிக இலகுவில் முன்னேற்ற முடியும்
சுற்றுலாத்துறை மையம் உருவாக குளங்கள் தேவைப்படும்-புராதன இடங்கள் தேவை. இவைகள் இருந்தால்தான் சுற்றுலாத்துறை மையங்களை உருவாக்கலாம் என்ற எண்ணங்கள்; பிழையானதாகும்;. மக்களின் பண்பாடுகளையும் அவர்களிடம் உள்ள வழமையான தொழிற்துறைகளையும் கவர்ச்சி மிக்கதாக மாற்றும் பேதே குறித்த ஒரு பிரதேசத்தை சுற்றுலாத்துறை மையமாக மாற்ற முடியும்.
சமயப் பண்பாடுகளுக்கு அப்பாற்பட்ட ஒன்றாகவும் இது பார்க்கப்படுகிறது. இஸ்லாமிய வரலாற்றைப் பார்க்கும் போது இறைதூதர்கள் தங்களது பணிகளை சுற்றுலாப் பிரயாணங்களினூடாகவே இலகுபடுத்தினார்கள் என்பதை அறிய முடிகிறது.
அம்பாறை கரையோரப்பகுதிகளில் சுற்றுலாத்துறை மையங்களாக உருவாக்கக் கூடிய எத்தனையே இடங்கள் இருந்தும் அவை எம்மால் ஆய்வுக்குட்படுத்தி உரியமட்டங்களுக்கு கொண்டு சென்ற போதும் அரச தரப்பு அதிகாரிகள் இவ்விடயத்தில் அக்கறையற்றும் ஒத்துழைப்பும் இல்லாமல் இருப்பதும் கவலையளிக்கிறது. நாம் இத்துறையில் நீண்ட தூரப்பயணம் போக வேண்டுமாயின் சகல தரப்பினரும்; ஒன்றிணைந்து பயணிக்க வேண்டும்.
நமது நாட்டிள்ள இயற்கை வளங்கள் எத்தனையோ அழிக்கப்பட்டுள்ளன. குளங்கள் பல மூடப்பட்டள்ளன. வகுப்பறைகளில் கற்பிக்கப்படுகின்ற பாடங்களை மட்டும் நம்பியிராமல் சுற்றுப்புறத்தின் அவசியம் பற்றியும் மாணவ்களுக்கு நேரடித்தரிசிப்பின் மூலம் உணர்ந்த வேண்டும். இயற்கைப் பாதுகாப்பு பற்றி எத்தி வைக்க வேண்டும். இதுவெல்லாம் உல்லாசத்துறை வளர்ச்சிக்கு கட்டியம் கூறவல்லன
கல்முனை மாநகர எல்லைக்குள் எத்தனையோ சுற்றுலாத்துறை இசைவிடங்கள் இருக்கின்றன. அவற்றை அழகு படுத்தினாலே போதும் இப்பிரதேசத்தை செல்வச் செழிப்புடனும் மற்றவர்கள் தேடுகின்ற மையமாகவும் மாற்ற முடியும். பொருளாதாரத்தளமாகவும் மாறும். ஆயினும் அதற்கான ஆயத்தங்களில் சம்பந்தப்பட்ட தரப்பினர் இல்லாமையே சுற்றுலாத்துறையின் பின்னிற்றலுக்குக் காரணமாகும். மீன் பிடித்துறையை வைத்தே மிகப்பெரிய சுற்றுலா மையத்தை உருவாக்க முடியும்.
உள்ளத்தைக் கவர்வதும் இருப்பதை வளமாக்குவதுமே இத்துறையின் முக்கிய அடைவுகல்லுக்கான ஆயுதமாகும். அதனை விளங்கி அனைவரும் ஒன்றிணைவான் மூலம் சுற்றுலாத்துறையை இலங்கையில் மேம்மபடுத்த முடியும் என்றார்.
வேலை வாய்ப்பற்றிருக்கும் ஆண்கள் பெண்கள் மற்றும் வலது குறைந்தோரை இத்துறைக்குள் உட்படுத்தி பயிற்சிகளையும் தொழில்வாய்ப்பினையும் ஏற்படுத்திக் கொடுப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும்
ஈ.எல்.லைப் S4IG திட்டமானது பொலன்னறுவை-திருகோணமலை-மட்டக்களப்பு-அம்பாறை ஆகிய இடங்களில் முன்னெடுக்கப்படுகின்றமை முக்கிய அம்சமாகும்