நாவராத்திரி விழாவினை முன்னிட்டு சம்மாந்துறை கல்வி வலயத்திற்குட்பட்ட வேப்பையடி கலைமகள்வித்தியாலயத்தில் நடாத்தப்பட்ட போட்டிநிகழ்வில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு சுவிஸ் உதயத்தின் ஏற்பாட்டில் சுவிஸ் உதயத்தின் பொருளாளர் சமுகசேவகருமான க.துரைநாயகத்தின் நிதி உதவியின் மூலம் பரிசு வழங்கிவைக்கும் நிகழ்வு அதிபர் சீ.பாலசிங்கன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது.
இந்நிகழ்வில் சுவிஸ் உதயத்தின் கிழக்குமாகாணக்கிளையின் பொருளாளர் கலாபூசனம் பாவாணர் அக்கரைப்பாக்கியன் மற்றும் பாடசாலையின் ஆசிரியர்கள் கலந்து சிறப்பித்தனர்.
கடந்த மூன்று வருடங்களாக சுவிஸ் உதயம் அமைப்பினால் இம்மாணவர்களுக்கு பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டுவந்த நிலையில் கடந்தவருடம் நடைபெற்ற நவராத்திரிவிழாவில் சுவிஸ் உதயத்தின் பொருளாளர் சமுகசேவகர் க.துரைநாயகம் அவர்கள் அதிதியாகக் கலந்து கொண்டு சிறப்பித்திருந்தபோது தொடர்ச்சியாக வேப்பையடி கலைமகள் வித்தியாலயத்திற்கு தனது சொந்த நிதியில் பரிசுப் பொருட்களை பெற்றுத்தருவதாக உறுதியளித்தார்.
அதற்கு இணங்க இந்தப் பரிசிப்பொருட்களை அவர் பெற்றுத்தந்துள்ளதாக அதிபர் தெரிவித்தார். அதே வேளை இவ் உதவியினைச் செய்த சுவிஸ் உதயத்தின் பொருளாளர் சமுகசேவகர் க.துரைநாயகம் அவர்களுக்கு அதிபர் பாலசிங்கன், ஆசிரியர்கள் மற்றும்; பாடசாலை சமூகம் நன்றிதெரிவித்துள்ளனர். அதேவேளை பாவாணர் அக்கரைப்பாக்கியன் அவர்களது இலக்கியசேவையினைப் பாராட்டி கௌவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.