வெற்றிரெப் இணையத்தளத்தின் ஊடகவியலாளர்களுக்கு இலட்சினை பொறிக்கப்பட்ட ரீசேட்டுக்கள் வழங்கிவைப்பு

வெற்றிரெப் இணையத்தளத்தின் ஊடகவியலாளர்களுக்கு இலட்சினை பொறிக்கப்பட்ட ரீசேட்டுக்கள் வழங்கிவைப்பு
(சுதாகரன்,முஸ்தபா,தவக்குமார்,துதிமோகன்)
வெற்றிரெப் இணையத்தளத்தின் ஊடகவியலாளர்களுக்கு இலட்சினை பொறிக்கப்பட்ட ரீசேட்டுக்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு சனிக்கிழமை 08 ஆம் திகதி வெற்றிரெப் இணையத்தளத்தின் பணிப்பாளர் ஊடகவியலாளர் சா. நடனசபேசன் தலைமையில் இடம் பெற்றது.
வெற்றிரெப் இணையத்தள ஊடகவியலாளர்களுக்காக ஊடகவியலாளர் சா. நடனசபேசன் எருவில் கல்வி சமூக ஒன்றியத்தின் ஸ்தாபகத் தலைவர் அ.பவசிகரன் அவர்களிடம் வேண்டிக்கொண்டதற்கு இணங்க இவ் உதவி வழங்கி வைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் சுவிஸ் உதயத்தின் தாய்ச்சங்கத்தின் பொருளாளர் சமூகசேவகர், தொழிலதிபர் க.துரைநாயகம் எருவில் கல்வி சமூகப் பொருளாதார ஒன்றியத்தின் ; ஸ்தாபகத் தலைவர் அ.வசிகரன்,சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்குமாகாணக் கிளையின் தலைவர் பிரதிக்கல்விப் பணிப்பாளர் .மு.விமாலநாதன், சிரேஷ்ட ஊடகவியலாளரும் உதவிக்கல்விப் பணிப்பாளருமான வி.ரி.சகாதேவதராகசா சுவிஸ் உதயம் அமைப்பின் கிழக்குமாகாணக்கிளையின் பொருளாளர் பாவாணர் அக்கரைப்பாக்கியன் கிழக்குமாகாண ஊடகவியலாளர் சங்கத்தின் தலைவர் தேவதிரன் எருவில் கல்வி சமூகப் பொருளாதார ஒன்றியத்தின் ; எருவில் கல்வி சமூகப் பொருளாதார ஒன்றியத்தின் ;செயலாளர் ஆசிரியர் இ.ஜீவராஜ் உட்பட ஊடகவியலாளர்கள் கலந்து சிறப்பித்தனர்.
வெற்றிரெப் இணையத்தளத்திற்கு உதவிகளைச் செய்த சுவிஸ் உதயம் அமைப்பின் தாய்ச்சங்கத்தின் பொருளாளர் க.துரைநாயகம் எருவில் கல்வி சமூக ஒன்றியத்தின் ஸ்தாபகத் தலைவர் அ.வசிகரன் சுவிஸ் உதயம் அமைப்பின் தாய்ச்சங்கத்தின் செயலாளர் அம்பலவானர் ராஜன், சிரஷ்ட ஊடகவியலாளர் வி.ரி.சகாதேவராசா இளம் ஊடகவியலாளருக்கான விருதுபெற்ற றமீஸ் ஆகியோர் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts