பிரதமர் நியமனமானது சட்டவிதிமுறைகளுக்கு முறனானது. தமிழ் மக்களுக்கு இணைந்த வடகிழக்கில் சமஸ்டி முறையிலானஆட்சியை மஹிந்த வழங்குவாரானால் நாம் மஹிந்தவுக்கு ஆதரவு வழங்கவும் தயார். என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
ஜனநாயக நாட்டில் பிரதமரை நியமிக்கும் அதிகாரம் ஜனாதிபதிக்கு இருந்த போதிலும் பிரதமரை நியமிப்பதற்கான சட்ட திட்டங்கள் மற்றும் பாராளுமன்ற சம்பிரதாயங்கள் உள்ளன. இதனை விடுத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசோனா பிரதமரை நியமித்து இருப்பதானது நாட்டின் ஸ்திரதன்மையை சீர்குலைக்கின்ற செயற்பாடாக அமைந்திருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
இந் நிகழிவில் கலந்து கொண்டு தொடர்ந்தும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்,
அம்பாறை திருக்கோவில் உதயசூரியன் விளையாட்டுக் கழகத்திற்கான உள்ளக விளையாட்டு அரங்குக்கான அடிக்கல் நடும் நிகழ்வில் இன்யை தினம் கலந்து கொண்டு உரையாற்றும் போதே மேற்படி கருத்தினை தெரிவித்து இருந்தார். நாட்டில் பிரதமர் ஒருவரை நியமிப்பது தொடர்பாக சட்டம் மற்றும் பாராளுமன்ற சம்பிரதாயங்கள் இருந்த போதிலும் தற்போது இடம்பெற்று இருக்கும் பிரதமர் நியமனமானது நாட்டு மக்கள் மத்தியில் ஒரு அச்சத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.
இவ்வாறு ஒரு ஜனநாயக நாட்டில் இடம்பெறுவது என்பது கவலையளிக்கும் அதேவேளை நாட்டின் அமைதிக்கும் ஸ்திரதன்மைக்கும் பங்கம் ஏற்படுத்துவதாகவே அமைந்துள்ளது. பிரதமராக மஹிந்த ராஜபக்ஷவாக இருக்கட்டும், ஜே.வி.பி. தலைவர் அனுரகுமார திஸாநாயக்காவாக இருக்கட்டும் அல்லது ரணில் விக்கிரமசிங்காவாகவே இருக்கட்டும் இந்த நாட்டில் பிரதமர் யார் வந்தாலும் கவலையில்லை இருந்தும் பாராளுமன்ற சட்டங்கள் மற்றும் சம்பிதாயங்களை சரியான முறையில் கடைபிடித்து நியமனங்கள் முன்னெடுத்துச் செல்லப்பட வேண்டும் என்பதே எமது கொள்கையாக இருக்கின்றது.
மேலும் இந்த நாட்டில் யார் ஆட்சியில் இருந்தாலும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் கொள்கையும், சிந்தனையும், செயலும் இணைந்த வடகிழக்கில் சமஸ்டி முறையிலான ஆட்சியில் தமிழ் மக்களுக்கான தீர்வு திட்டங்கள் கிடைக்கப்பட வேண்டும் என்பதே தமிழ் தேசிய கூட்டமைப்பின் முதன்மையான கோரிக்கையாக இருக்கின்றது.
இந்த நாட்டில் தமிழர்களுக்கான சமஸ்டி முறையிலான ஆட்சி கிடைக்குமாக இருந்தால் எமது ஆதரவு அவர்களுக்கு வழங்குவதற்கு நாம் தயாராகவுள்ளோம் இதனை மஹிந்த ராஜபக்ஷ வழக்குவதாக உறுதியளித்தால் எமது ஆதரவுகளை மஹிந்த ராஜபக்ஷவுக்கு வழங்குவதற்குத் தயாராக இருக்கின்றோம். என தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்துள்ளார்.