மட்டக்களப்பு மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான செயலமர்வு இடம்பெற்றது

மட்டக்களப்பு மாவட்டத்தைச் சேர்ந்த  ஊடகவியலாளர்களுக்கு அரசாங்க தகவல் திணைக்களத்தினால் முழுநாள் ஊடகச் செயலமர்வு சனிக்கிழமை (27) காலை 9.30 மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.

அரசாங்க தகவல் திணைக்களத்தின் நிர்வாகத்துக்கான பணிப்பாளர் நிர்மலீ பிரியங்கனி குமாரகே தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் நடைபெற்றது.

இச் செயலமர்வில் மட்டக்களப்பு மாவட்டத்தை சேர்ந்த 40 மேற்பட்ட ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டார்கள்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் அரசாங்கத்தின் அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பில், மட்டக்களப்பு மாவட்டத்திலுள்ள ஊடகவியலாளர்களுக்கு முறையாக தெளிவுபடுத்துவதே இந்த செயலமர்வின் நோக்கமாகும்.

இதற்கு மேலதிகமாக,தகவல் அறியும் உரிமைச் சட்டத்தையும், ஊடகத்துறை ஆற்றலையும்,இன்றைய ஊடகத்தின் நிலைப்பாட்டையும் மேம்படுத்தும் நோக்கிலான சிறந்த உரைகளும் இங்கு இடம் பெற்றது.இந்நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட தகவல் திணைக்கள அதிகாரி எஸ்.ஜீவானந்தம்,டெசதிய மகேசின் நிறுவனத்தின் ஆசிரியர் எல்.பீ.திலகரத்ன,பிரபல சட்டத்தரணி  மொகமட் அஷாட் ஆகியோர்கள் வளவாளர்களாக கலந்துகொண்டார்கள்.

Related posts