இலங்கையில் அரசியல் நெருக்கடி மற்றும் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டமை தொடர்பில் சுவிட்சர்லாந்து கவலை வெளியிட்டுள்ளது.
அந்நாடு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், இலங்கையில் அதிகரித்துவரும் அரசியல் நெருக்கடி மற்றும் நாடாளுமன்றத்தை கலைத்த சமீபத்திய முடிவு ஆகியவற்றால் சுவிட்சர்லாந்து கவலை கொண்டுள்ளது.
மேலும் இந்த முடிவு இலங்கையின் ஸ்திரத்தன்மைக்கு அச்சுறுத்தலாக இருப்பதாக சுவிட்சர்லாந்து கருதுகிறது. இதனால் பொருளாதார செழிப்பு, நல்லிணக்க செயற்பாடு ஆகியவற்றில் பாதகமான விளைவுகள் ஏற்படலாம்.
அனைத்து கட்சிகளும் ஜனநாயக வழிமுறைகளை பின்பற்றவும், சட்டத்தையும் மதித்து செயற்பட வேண்டும் எனவும் சுவிட்சர்லாந்து கேட்டுக்கொண்டுள்ளது.
அத்துடன் தற்போதைய நெருக்கடி நிலைக்கு மிக விரைவில் தீர்வுகண்டு, நாட்டின் ஜனநாயகத்தை பேணுமாறும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.