க.பொ.சாதரணப் பரீட்சைக்கு 6,55 641 பரீட்சாத்திகள் தோற்றவுள்ளார்கள்.

இவ்வருடம் நடைபெறவிருக்கின்ற க.பொ.சாதரணப் பரீட்சைக்கு(2018)  நாடாளவியரீதியில் ஆறு இலட்சத்து ஐம்பத்தாராயிரத்து அறுநூற்றி நாற்பத்தொரு(6,56 641)பரீட்சாத்திகள் பரீட்சைக்கு தோற்றவுள்ளதாக இலங்கை பரீட்சை திணைக்களத்தின் உதவி ஆணையாளர் எஸ்.பிரகாசன்

மட்டக்களப்பு மாவட்டத்தில் க.பொ.சாதாரணப் பரீட்சைக்கு பரீட்சை மேற்பார்வையாளர்களாக கடமையாற்றுபவர்களுக்கான “பரீட்சை அறிவுறுத்துதல்” கூட்டமானது மட்டக்களப்பு வலயக்கல்வி பணிப்பாளர் கே.பாஸ்கரன் தலைமையில் மட்டக்களப்பு வின்சன்ட் உயர்தர பெண்கள் தேசிய பாடசாலையில் வியாழக்கிழமை(22)காலை முதல் மாலை வரை நடைபெற்றது.

இக்கூட்டத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள வலயக்கல்வி பணிப்பாளர்கள்,பரீட்சை மேற்பார்வையாளர்கள்,இணைப்பு நிலையங்களின் பொறுப்பாளர்கள்,மட்டக்களப்பு பொலிஸ் அத்தியட்சகர்,உதவி பொலிஸ் அத்தியட்சகர்,பிரதிக்கல்வி பணிப்பாளர்கள்,உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.

உதவி பரீட்சை ஆணையாளர் தொடர்ந்து கருத்துக் தெரிவிக்கையில்:-க.பொ.சாதாரணப் பரீட்சைக்கு 4,22 850 பாடசாலை பரீட்சாத்திகளும்,2,33 791 தனிப்பட்ட பரீட்சாத்திகளுட மொத்தமாக 6,56 641 பரீட்சாத்திகள் நடைபெறவிருக்கும் க.பொ.சாதரணப் பரீட்சைக்குத் தோற்றவுள்ளார்கள்.இப்பரீட்சையானது 4661 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளது.பரீட்சைக்காக 541 இணைப்பு நிலையங்களும்,33 பிராந்திய நிலையங்களாக கொண்டு பரீட்சை நடாத்துவதற்கு திட்டமிட்டுள்ளது.

விஷேட பரீட்சை நிலையங்களாக இரத்மலான,தங்கல்ல,சிலாபம் மற்றும் சிறைச்சாலைகள்,வைத்தியசாலையில் பரீட்சை ஒழுங்குகள் செய்யப்பட்டுள்ளது.எந்தக் குறைபாடுகள்,குழப்பங்கள் இல்லாமல் பரீட்சை நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.பரீட்சை நோக்குனர்கள் சரியாக செயற்பட வேண்டும்.பரீட்சை கடமைகளில் ஈடுபடுகின்ற அனைவரும் சிறப்பாகவும்,சரியாகவும்,நேர்மையாகவும்,அர்ப்பணிப்புடன் செயற்படவேண்டும்.மாணவர்களுடன் பொறுப்பு வாய்ந்ததாகவும் செயற்படவேண்டும்.பரீட்சைகளை வினைத்திறனுடன் நடாத்தவேண்டும்.பரீட்சை நிலையங்கள்,இணைப்பு நிலையங்களில் ஆயுதம் தரித்த பொலிசார் கடமையாற்றுவது உசிதமானதாகும்.அவ்வாறு கடைமையாற்ற தவறும் பொலிசாரை பொறுப்பானவர்கள் கண்காணிக்க வேண்டும்.

பரீட்சை மோசடிகளை முன்கூட்டியே அனுமானித்து மோசடிகள்,குழப்பங்களை தவிர்ப்பது நல்லதாகும்.மதுபோதையில் பரீட்சை நிலையங்களில் செயற்படுவது தவிக்கப்பட வேண்டுமென பொலிசார் குறிப்பிடுகின்றார்கள்.மேலும் பரீட்சை கடமைகளில் பொலிசார்,புலனாய்வு அதிகாரிகள்,அவசர பொலிஸ் பிரிவு  ஈடுபடுத்தப்படவுள்ளார்கள். எனத் தெரிவித்தார்.

Related posts