சுவிஸ் உதயம் அமைப்பின் அணுசரணையுடன் மட்டக்களப்பு மயிலந்தனைக் கிராமத்தில்; பிரத்தியேகமாக இயங்கிவரும் பாடசாலை மாணவர்களுக்கு சுவிஸ் உதயத்தின் ஏற்பாட்டில் அவ் அமைப்பின் பிரதிப் பொருளாளர் எஸ்.சுபாஸ் அவர்களது நிதி உதவி மூலம் கற்றல் உபகரணம் வழங்கிவைக்கும் நிகழ்வு 25 ஆம்திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது
சுவிஸ் நாட்டில் இருந்து வருகைதந்த எஸ்.சுபாஸ் அவர்கள் சுவிஸ் உதயத்தின் தலைவர் ரி.சுதர்சன்,உப செயலாளர் அம்பலவாணர் ராஜன், மற்றும் கிழக்குமாகாணக்கிளை நிருவாகத்தின் வேண்டுதலுடன் மயிலந்தனைக் கிராமத்திற்குச் சென்று கற்றல் நடவடிக்கைகளை பார்வையிட்டதுடன் அம் மாணவர்களுக்கு கற்றல் உபகரணமும் வழங்கிவைக்கப்பட்டது.
இந்நிகழ்வில் சுவிஸ் உதயத்தின் கிழக்குமாகாணக்கிளையின் பொருளாளர் பாவாணர் கலாபூசணம் அக்கரைப்பாக்கியன் நிருவாகசபை உறுப்பினர்கள் அப்பாடசாலையில் கற்பிக்கும் ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்துசிறப்பித்தனர்.
12 வருடமாக மயிலந்தனைக் கிராமத்தில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இவ் இலவச வகுப்புக்கு சுவிஸ் உதயம் அமைப்பு நிதி உதவி வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.