கல்முனை மாநகர மேயர் தன்னிச்சையாக செயற்படுவதுடன் சபை நடவடிக்கை இதுவரைக்கும் எட்டு தடவைகள் நடைபெற்றுள்ளன இதில் 1 ஆம் அமர்வைத்தவிர ஏனைய அனைத்து அமர்வுகளும் குழப்பத்தில் முடிந்ததுடன் முதல்வரின் சர்வாதிகாரப் போக்கே இடம்பெற்றுள்ளதாக கல்முனை மாநகரசபையின் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு உறுப்பினர் கென்றி மகேந்திரன் தெரிவித்தார்.
நிதி குழு தீர்மானங்களை மாநகர மேயர் ரக்ஹீப் கட்சி சார்ந்து செயற்படுவதை மக்களுக்கு தெளிவுபடுத்துவதற்கான ஊடகவியலாளர் மாநாடு நேற்று மாலை கல்முனை எஸ்.எல்.ஆர் விடுதியில் நடைபெற்றது.
இதில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் சார்பினரும்இ அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தமிழர் விடுதலை கூட்டணி கட்சியின் சார்பில் ஒருவரும் மற்றும் சுயட்சிக் குழுக்களுமாக இணைந்து இச்சந்திப்பை ஏற்பாடு செய்திருந்தனர்
கல்முனை மாநகர சபையில் நடைபெற்ற எட்டு அமர்வுகளும் குழப்பகரமானதாகவே அமைந்திருந்தது. இதனால் மாநகரசபையின் செயற்பாடுகள் சீரான முறையில் அமையவில்லை
நிதிக்குழு சம்பிரதாயங்களை மீறி சர்வாதிகார போக்குடன் செயற்படுவதாகவும் நிதிக்குழுவில் மாநகர மேயர் கொண்டுவந்த தீர்மானத்தை பெரும்பான்மையை நிரூபித்து காட்ட முடியாமல் கட்சி சார்ந்து செயற்படுவதாகவும் மாநகர சபை கட்டளை சட்டத்தை மீறி செயற்படுகின்றார் .முதல்வர் அதிகாரத்தை கையிலெடுத்து மாநகர சபை உறுப்பினர்களை மோதவிட்டு தீர்மானங்களை பெரும்பான்மை உறுப்பினர்களது வாக்கெடுப்பின்றி செயற்படுத்த முனைவதனூடாக இவரது சர்வாதிகார போக்கை அறிய முடிகின்றது.கடந்த மூன்று அமர்வுகளின் போது அமர்வை இடைநடுவில் நிறுத்திவிட்டு முதல்வர் வெளியேறிச்செல்கின்றார.; பின்னர் எதிர்கட்சி உறுப்பினர்கள் சபையினைக் குழப்புவதாக எங்கள்மீது குற்றம் சுமத்துகின்றார். நாங்கள் வாக்களித்த மக்களுக்காக சேவை செய்ய இருக்கின்றோம் ஆனால் சபை நடவடிக்கையின் போது முதல்வர் சர்வாதிகாரப் போக்கைக் கடைப்பிடிக்கின்றார் என குற்றம் சுமத்தினர் இதன்போது.அகில இலங்கை மக்கள் காங்ரஷ் உறுப்பினர் சி.எம்.முபீத் சுயட்சைக்குழு உறுப்பினர் அஸிம் ஆகியோர் கருத்துத் தெரிவித்தனர்.