நாவிதன்வெளிப் பிரதேசசெயலகப் பிரிவுக்குட்பட்ட நாவிதன்வெளி பிரதேசத்தில் பலவருடகாலமாக இயங்கிவருகின்ற இலங்கை வங்கிக் கிளையில் ஏ.ரீ.எம் தன்னியக்க பணப்பரிமாற்ற வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் என வாடிக்கையாளர்களும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பாக அவர்கள் மேலும் தெரிவிக்கையில் இங்குள்ள மக்களும், வங்கி வாடிக்கையாளர்களும் அவசர நிலையில் பணத்தினைப் பெற்றுக்கொள்வதற்கு தொலைவில் உள்ள கல்முனை நகரத்திற்குச் செல்லவேண்டி இருப்பதுடன் மழை காலங்களில் வெள்ளம் ஏற்பட்டால் கல்முனை நாவிதன்வெளியினை இணைக்கும் கிட்டங்கி வீதி வெள்ளத்தில் மூழ்கும் காலத்தில் நாவிதன்வெளிப் பிரதேசத்திற்கான போக்குவரத்து முற்றாகத் தடைப்பட்டால் அவசர தேவைகளுக்குப் பணத்தினை கல்முனைக்குச் சென்று பெறமுடியாத நிலை ஏற்படுவதாகவும் அதனால் தாங்கள் பெரும் கஷ்டத்திற்கு ஆளாகுவதாக பொதுமக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அதே வேளை நாவிதன்வெளி இலங்கை வங்கியினை நம்பி வேப்பையடி, அன்னமலை ,சவளக்கடை, காரைக்குடா ,15 ஆம் 11 ஆம் கிராமம் குடியிருப்புமுனை, 7 ஆம் கிராமம் உள்ளிட்ட மக்கள் இந்த வங்கியில் வாடிக்கையாளர்களாக இருந்து பயன்பெற்று வருகின்றனர்.இவர்களின் நலனைக் கருத்தில் கொண்டு நாவிதன்வெளி இலங்கைவங்கிக்கு தன்னியக்க பணப்பரிமாற்றல் வசதிகளை ஏற்படுத்தித் தருவதனால் அப்பிரதேசத்தில் உள்ள மக்களுக்கு பயணாக அமையும் என பொதுமக்கள் சுட்டிக்காட்டுகின்றனர். இதனைக் கருத்தில் கொண்டு சம்மந்தப்பட்டவர்கள் தன்னியக்க பணப்பரிமாற்ற வசதியினைச் செய்துதருமாறு பொதுமக்கள் வேண்டுகோள் விடுததுள்ளனர்.