கிழக்கு மாகாணத்திலுள்ள சகல பாடசாலைகளும் வருடாந்த இல்ல விளையாட்டு போட்டிகளை எதிர்வரும் ஜனவரி 31ஆம் திகதிக்குள் நடத்தி முடிக்க வேண்டும் என கிழக்கு மாகாண கல்வி பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் தெரிவித்துள்ளார்.
சகல வலய கல்வி பணிப்பாளர்களுக்கும் இன்று அனுப்பி வைத்துள்ள சுற்று நிரூபத்திலேயே இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறித்த சுற்றுநிரூபத்தில் மேலும்,
இல்ல விளையாட்டுப் போட்டிகள் மற்றும் பயிற்சிகள் போன்றவற்றை பாடசாலை நேரத்தில் நடத்துவதை தவிர்த்து கொள்ள வேண்டும்.
போட்டிக்கான தெரிவுகளை பாடசாலை நேரத்தில் நடத்த வேண்டுமாக இருந்தால் குறிப்பிட்ட தினங்களில் பாடவேளைகளை 30 நிமிடங்களாக குறைத்து தெரிவுகளுக்கு மிகுதி நேரத்தினை பயன்படுத்தலாம்.
வலயமட்ட போட்டிகள் யாவும் 31.03.2019இற்கு முதல் நடத்தி முடிக்கப்படல் வேண்டும். அதேபோல் மாகாணமட்ட போட்டிகளை 10.06.2019இற்கு முதல் நடத்தி முடித்தல் வேண்டும்.
நேரடியாக தேசிய மட்டத்தில் நடைபெறும் போட்டிகளுக்கான விண்ணப்பங்களை 31.03.2019இற்கு முன்னரும் மாகாண மட்ட போட்டிக்கான விண்ணப்பங்களை 31.01.2019இற்கு முன்னரும் அனுப்பி வைத்தல் வேண்டும்.
வலய மட்டத்தில் மற்றும் மாகாண மட்டத்தில் நடாத்தப்படும் ஏனைய குழு போட்டிகள் மெய்வல்லுனர் போட்டிகளுக்கான விண்ணப்பங்களை 15.04.2019இற்கு முன்னர் அனுப்பி வைத்தல் வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.