பெரியநீலாவணை தொடர்மாடி மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகள்.வழங்கிவைப்பு

கல்முனைத் தமிழ்ப்பிரிவு பிரதேசசெயலகப்பிரிவில் உள்ள பெரியநீலாவணை சுனாமித் தொடர்மாடியில் வசிக்கும் மாணவர்களுக்கான கற்றல் உபகரணம் திகாமடுள்ள மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் அவர்களது சொந்த நிதியில் வழங்கிவைக்கப்பட்டது.

பெரியநீலாவணையில் வசிக்கும் சமூகத்தொண்டன் கோகுலன் அவர்களது வேண்டுகோளின்பேரில் பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் அவர்களால் அப்பியாசக் கொப்பிகள் வழங்கிவைக்கும் நிகழ்வு கோகுலன் தலைமையில் 29 ஆம் திகதி சனிக்கிழமை இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கல்முனை மாநகரசபை உறுப்பினர்களான கே.சிவலிங்கம்,பி.செல்வநாயகம்,ஏ.இராஜரெத்தினம்,எஸ்.குபேரன் மற்றும் மட்டக்களப்பு உயர்தொழில்நுட்பக்கல்லூரியின் பணிப்பாளர் கே.ஜெயபாலன் உட்பட பலர் கலந்துசிறப்பித்தனர் . இந்நிகழ்வின் போது அப்பகுதியில் தரம் 1-11 வரை கல்வி கற்கும் மாணவர்களுக்கு  அப்பியாசக் கொப்பிகள் வழங்கிவைக்கப்பட்டது.

OLYMPUS DIGITAL CAMERA


Related posts