மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலகத்திற்குட்பட்ட குருக்கள்மடம் ஏசியன் விளையாட்டுக்கழகத்தினருக்கு இரண்டறை இலட்சம் ரூபா பெறுமதியான விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைக்கும் நிகழ்வு கழத்தலைவர் இ.மதன் அவர்களின் தலைமையில் குருக்கள்டமட கிராம அபிவிருத்தி சங்க கட்டடத்தில் நேற்று மாலை இடம்பெற்றது.
இந்நிகழ்வினை சிறப்பிற்கும் முகமாக முன்னாள் பிரதியமைச்சரும் பட்டிருப்புத் தொகுதியின் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதம அமைப்பாளருமான சோ.கணேசமூர்த்தி மற்றும் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் வில்வரெத்தினம் சிவப்பிரியா ஆகியோர் பிரதம அதிதிகளாகவும் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்களான லாவண்ணியா சிறிதரன்,கே.தவராணி ஐக்கிய தேசிய கட்சியின் பிரதேச சபை வட்டார உறுப்பினர் இளையதம்பி மற்றும் கழக உறுப்பினர்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
பிரதம அதிதிகளாக கலந்து கொண்டவர்களினால் விளையாட்டு உபகரணங்கள் கழக உறுப்பினர்களிடம் கையளிக்கப்பட்டது.