இந்த நாட்டினுடைய அரசியலைத் தீர்மானிக்கின்ற மாபெரும் சக்தியாகவே தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் தமிழ் மக்களும் திகழ்கின்றது அதாவது எந்தக் கட்சியினர் ஆட்சி புரிந்தாலும் அவர்களது ஆட்சி அதிகாரத்தினைத் தீர்மானிக்கும் பெரியதோர் பலம் தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு இருக்கின்றது. என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் திகாமடுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் கவீந்திரன் கோடீஸ்வரன் தெரிவித்தார்
வீடமைப்பு அதிகார சபையினால் நாவிதன்வெளிப் பிரதேசசெயலகத்தின் மத்தியமுகாம் 6 இல் 25 வீட்டு தொகுதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு 12 ஆம் திகதி சனிக்கிழமை நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன் தலைமையில் இடம்பெற்றநிகழ்வில் கலந்துகொண்டு பேசுகையில் மேற்கண்டவாறு தெரிவித்தார்
இந்நிகழ்வில் முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினரும் நாவிதன்வெளி பிரதேச சபை தவிசாளருமாகிய தவராசா கலையரசன் ஆகியோர்கள் உட்பட பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் பிரதேசசபை உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து சிறப்பித்தனர்.
அமைச்சர் சஜித் பிரமதாசவின் பிறந்த தினத்தை முன்னிட்டு நாடு பூராகவும் நூறு வீட்டுத்திட்டம் எனும் கருப்பொருளில் அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம்பெற்று வருகின்ற நிலையில் இவ்வீட்டுத்திட்டத்திற்கான அடிக்கல் நாட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
அவர் மேலும் பேசுகையில் இந்த நாட்டில் நல்லதோர் ஆட்சி நிலைத்திருக்கின்றது என்றால் அது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பினாலேயேமுன்னெடுக்கப்படதாகவே இருக்கின்றது இந்த நாட்டினுடைய ஜனநாயகத்தினைப் பாதுகாத்தது சட்டம் ஒழுங்கு நீதிiயினை நிலைநாட்டிய பெருமை தமிழ்த்தேசியக் கூட்டமைப்புக்கு இருக்கின்றது
இந்த நாட்டிலே மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் அராஜக ஆட்சிக்கு எதிராக சிறுபான்மையினரின் அனுசரணையுடன் புதிய ஜனாதிபதியாக மைத்திரிபால சிறிசேனவைக் கொண்டுவந்தோம் அவர் இப்போது தமிழர்களுக்கான தீர்வுதிட்ட வரைபு குறித்து எந்தவித கருத்தையும் குறிப்பிடாமல் பொதுஜன ஐக்கிய முன்னணியில் இருக்கின்ற நாடாளுமன்ற உறுப்பினர்களையும் தற்போதைய எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவையும் கொண்டு தமிழ் மக்களுக்கான தீர்வு திட்டங்களை நிராகரிக்க முயல்கின்றார்.
தமிழ் மக்களும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பும் மைத்திரி பால சிறிசேன அவர்களை ஜனாதிபதியாக கொண்டு வந்தார்கள் அந்த ஜனாதிபதி பதவிக்காலத்திலே சொன்ன வார்த்தை தமிழ் மக்களுக்கான உரிமையை வென்று கொடுப்பேன். என்று உறுதியுரைத்தவர் இதற்கு மறுபுறமாக மாறி தீர்வுதிட்டங்களை நிராகரிக்கின்ற சந்தர்ப்பத்தை ஏற்படுத்துகின்றவராக இருக்கின்றார். இப்படியான மனோநிலை மாறவேண்டும்
சிறுபான்மையினர் ஒன்றிணைந்து ஜனாதிபதியாக்கியவர் எங்களுக்கெதிராக மாறுகின்றார். யாருக்கெதிராக ஜனாதிபதியாக்கினோமோ இன்று அவர் எதிரானவருடன் கூட்டு சேர்ந்து இந்த நாட்டிலே தமிழ் மக்கள் உரிமையை வென்றெடுப்பதில் தடையாக இருப்பது மிகவும் மனவேதனைக்குரியதும் கவலைக்குரிய விடயம்.
இந்தநாட்டில் தமிழர்களின் நலன் சார்ந்ததாக பல ஒப்பந்தங்கள் செய்யப்பட்டன அதாவது தந்தைசெல்வா, பண்டாசெல்வா போன்ற ஒப்பந்தங்கள் அன்று பேரினவாத சக்திகளால் கிழித்தெறியப்பட்டன அந்த நிலை இன்று தொடர்ந்துவிடக் கூடாது அதற்காக பல விட்டுக் கொடுப்புக்களை செய்து வருகின்றோம் ஆனால் தற்போது 80 தடவை ஆராயப்பட்ட அரசியல் சாசனத்தை பேரினாவதிகள் நிராகரிக்கும் சதிகளை மேற்கொள்வதாக தெரிகின்றது
தமிழ் தேசிய கூட்டமைப்பு நீதிக்கானதும் நியாயமான கோரிக்கைகளுக்காகவே போராடி கொண்டிருக்கிறது. இப்பொழுது அபிவிருத்தி மற்றும் தமிழ் மக்களுக்கான தீர்வுத்திட்டம் எனும் சமமான இலக்கை நோக்கியே பயணிக்கின்றது. எதிர்காலங்களில் நாம் நாவிதன்வெளி பிரதேசத்தில் பாரிய அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்க போவதாகவும் உறுதியளித்துள்ளார்.