புதிய அரசமைப்பு யோசனையில், சமஷ்டிக்கான தன்மைகள் உள்ளடக்கப்படுமாயின், அதற்கு தாங்கள் ஆதரவளிக்கப் போவதில்லையென, ஐக்கிய தேசிய கட்சியின் பின்னிலை நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.
இது குறித்து கருத்துரைத்த ஐக்கிய தேசிய கட்சியின் பின்னிலை நாடாளுமன்ற உறுப்பினரான சமிந்த விஜேசிறி, தற்போது முன்வைக்கப்பட்டுள்ள அரசமைப்பின் யோசனையினுள் ஒருமித்த நாடு என்ற வார்த்தைக்கு தெளிவான பொருள் விளக்கம் அளிக்கப்பட வேண்டுமெத் தெரிவித்தார்.
அத்துடன், தற்போது கொண்டுவரப்பட்டுள்ள யோசனைக்கு அமைய அரசமைப்பு உருவாக்கப்படும்பட்சத்தில், அதற்கு ஆதரவளிக்க தாங்கள் தயாராக இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.