ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பணிப்புரைக்கமைவாக, நாடளாவிய ரிதியில் தேசிய போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு செயற்றிட்டம், சகல பாடசாலைகளிலும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
போதைக்கு எதிராக பாடசாலையின் பலம்” எனும் தொனிப்பொருளுக்கமைவாக ஜனவரி 21 முதல் 25 வரை இத்திட்டம் கட்டம் கட்டமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இதற்கமைவாக, ஆலையடிவேம்பு கல்வி கோட்டத்துக்குட்பட்ட கண்ணகி கிராமம், கண்ணகி வித்தியாலயத்தில் இவ்வேலைத்திட்டம் இன்று (25) காலை அமுல்படுத்தப்பட்டது.
பாடசாலையின் அதிபர் ரி.இராசநாதன் தலைமையில் போதைப்பொருள் ஒழிப்பு வேலைத்திட்ட பொறுப்பாசிரியர் எஸ்.மோகன்ராஜ் ஒருங்கிணைப்பில் இது இடம்பெற்றது.