வவுணதீவில் சுட்டுக்கொலை செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகஸ்தரின் சகோதரிக்கு பாராளுமன்ற உறுப்பினர் வியாளேந்திரன் அவரின் முயற்ச்சியால் அரசதுறையில் தொழில் வழங்கப்பட்டுள்ளது.
வவுணதீவில் படுகொலை செய்யப்பட்ட அம்பாறை பெரியநீலாவணை கிராமத்தைச் சேர்ந்த கணேஸ் தினேஸ் அவர்களின் சகோதரிக்கு அரச துறையில் வேலை வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னர் மட்டக்களப்பு வவுணதீவு காவலரணில் வைத்து இனம் தெரியாத ஆயுததாரிகளால் கணேஸ் தினேஸ் எனும் தமிழ் பொலிஸ் உத்தியோகத்தர் சுட்டுக் கொல்லப்பட்டார்.இதனைத் தொடர்ந்து அவர்களது வீட்டுக்கு சென்ற மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன்,ஜனாதிபதியின் இணைப்பு செயலாளர் கோல்டன் பெர்னான்டோ,ஏறாவூர் பற்று பிரதேச சபை உறுப்பினர் சுரேந்திரன் ஆகியோர்கள் திடீர் விஜயம் மேற்கொண்டு தமது ஆறுதலை தெரிவித்ததுடன் ஜனாதிபதியின் இரங்கல் செய்தியையும் வழங்கி வைத்தார்கள்.
இவ்விடயமாக பாராளுமன்ற உறுப்பினர் வியாளேந்திரன் அவர்கள் படுகொலை செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகஸ்தரின் சகோதரிக்கு வேலை இல்லாப் பிரச்சினையை ஜனாதிபதியின் இணைப்புச் செயலாளருக்கு சுட்டிக்காட்டியிருந்தார்.இதனை அறிந்து கொண்ட ஜனாதிபதியின் இணைப்புச் செயலாளர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவர்களின் கவனத்திற்கு எட்டிவைத்தார்.
அதன் பயனாக இன்று வெள்ளிக்கிழமை [15.02.2019] ஜனாதிபதியால் அரச வேலை வாய்ப்பு வழங்கப்பட்டது. இதற்காக ஆரம்பத்தில் இருந்து இறுதி வரை குடும்பத்தின் எதிர்கால நலன்கருதியும்,மனிதபிமானத்துடன் செயற்பட்ட மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் அவர்களுக்கும், ஜனாதிபதியின் இணைப்பு செயலாளர் கோல்டன் மற்றும் பிரதேச சபை உறுப்பினர் சுரேந்திரன் ஆகியோர்களுக்கும் படுகொலை செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகஸ்தர் தினேஸின் குடும்பத்தார் மனமார்ந்த நன்றிகளை தெரிவித்தனர்.