திருகோணமலை சண்முகா இந்து கல்லூரியில் அண்மையில் ஏற்பட்டிருந்த குழப்ப நிலை தொடர்பில் அம்பாறை மாவட்ட நல்லிணக்க குழுவினால் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது
நல்லிணக்க குழு நிலையத்தில் செவ்வாயய்க்கிழமை மாலை நடைபெற்ற ஊடகவியலாளர் சநிதிப்பின்போது இந்த அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது
அம்பாறை மாவட்ட நல்லிணக்க குழுவின் முஸ்லிம் பிரதேச செயலகத்திற்கு பொறுப்பான தலைவர் எஸ்.எல்.அசீஸ் தமிழ் பிரிவிற்கு பொறுப்பான தலைவர் வீ.தங்கவேல் சமாதானமும் சமூகப்பணியின் அமைப்பின் தேசிய இணைப்பாளர் ரீ.தயாபரன் மற்றும் நல்லிணக்க உறுப்பினர்கள் என பலரும் இதில் கலந்து கொண்டனர்.
மேலும் அவ் அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட விடயயம் பின்வருமாறு
திருகோணமலை ஷண்முகா இந்துக் கல்லூரியில் கடமையாற்றிய ஐந்து முஸ்லீம் ஆசிரியைகளின் ‘ஹபாயா’எனும் முஸ்லிம் கலாசார ஆடைக்கான தடையும் அதனை தொடர்வுபடுத்தியதாக தமிழ்இமுஸ்லீம் இனமக்களிடையே தேசிய ரீதியாக பரவிவரும் நல்லிணக்கத்துக்கு எதிரான செயற்பாடுகள் தொடர்பாக அம்பாறைமாவட்ட நல்லிணக்க குழுவின் அறிக்கை.
கடந்த ஏப்ரல் மாதம் 23ஆம் திகதி தொடக்கம் திருகோணமலை ஷண்முகா இந்துக் கல்லூரியில் கடமையாற்றிய ஐந்து முஸ்லீம் ஆசிரியைகள் ‘ஹபாயா’ எனும் முஸ்லிம் கலாசார ஆடை அணிந்து பாடசாலைக்குவருகைதந்திருந்தமையை பாடசாலை அதிபர் தலைமையிலான நிர்வாகத்தினர்இ குறிப்பிட்ட விடயம் தமதுபாடசாலை மரபினை பாதிப்பதாக கூறி குறித்த ஆடையினை அணிந்து பாடசாலைக்கு வருவதனை தவிர்க்குமாறுவேண்டி அப் பாடசாலை அபிவிருத்திக்குழுவின் ஊடாக நடவடிக்கைகளை மேற்கொண்டமை மற்றும் அதனைதொடர்ந்து ஏற்பட்ட சம்பவம்களை அடுத்து ஐந்து ஆசிரியைகளும் தற்காலிகமாக இடமாற்றம் செய்யப்பட்டுஇ கல்விஅமைச்சின் அதிகாரிகளை கொண்ட குழு அமைக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமைகுறிப்பிடத்தக்கது.
இதே வேளை இன் நிகழ்வினை தமக்கு சாதகமாக பயன்படுத்தி சிலர் சமூகவலைத்தளங்கள் ஊடாகவும் வேறுபலவழிகளிலும் சமூக நல்லிணக்கத்தை சீர் குலைக்கும் செயற்பாட்டில் இறங்கியுள்ளமை மிகவும் வருந்தத்தக்கவிடயமாகும். பல் இன சமூகங்கள் வாழும் எமது நாட்டில் இன சமூகங்களின் நல்லிணக்கத்தை மேன்படுத்த நாம் அனைவரும் அர்ப்பணிப்புடன் செயற்படுவது நமது தார்மீக கடமையாகும்.
அந்தரீதியில் இந்த முரண்பாடானது தேசியரீதியாக வளர்ந்து செல்லாது சுமுகமாக தீர்த்துக்கொள்ள குறிப்பிட்ட திருகோணமலை மாவட்டத்தில் உள்ள சமய சமூக சார் பணிபுரியும் அமைப்புகளும் தனி நபர்களும் கலந்துரையாடல்கள் மூலம் இதனை தீர்த்துவைக்க முன்வரவேண்டும்.
சமூக ஊடகங்களிலும் வலைத்தளங்களிலும் இவ் விடயம் தொடர்பாக உண்மைக்கு புறம்பான கருத்துக்களைவெளியிடும் அமைப்புகள் மற்றும் தனிநபர்கள் சமூக நல்லிணக்க செயற்பாடுகளை பாதிக்காது பொறுப்புடன் தகவல்பரிமாற்றங்களை மேற் கொள்ளுமாறு வேண்டிநிற்கின்றோம்.
அரசியல் வாதிகள் தங்களது அரசியல் சார் அபிலாசைகளை அடைந்து கொள்ளும் பொருட்டு அறிக்கைகளைவிடாது இனசமூக நல்லிணக்கத்தை கருத்தில் கொண்டு பொறுப்புணர்வுடன் தயவு கூர்ந்து அறிக்கை இடுமாறும்செயற்படுமாறும் வேண்டுகின்றோம்.
அமைச்சுக்கள் திணைக்களங்கள் தொடர்பான பிரச்சினைகள் ஏற்படும் போது அதனை அந்தந்த அமைப்பு சார்ந்தோர் சாதுரியமாகவும் துரிதமாகவும் தீர்த்து கொள்வதானது எதிர் காலத்தில் நல்லிணக்கத்தை முன்னெடுக்க உதவியாகஅமையும்.
நம் நாட்டில் வாழும் அனைவரும் எதிர்காலத்தில் எல்லா இன சமூக கலாசார விடயங்களுக்கும் மதிப்பளிக்கும்வகையில் நல்லிணக்கமாகவும் சுதந்திரமாகாவும் வாழ்வதற்கான சூழ்நிலையை கட்டியெழுப்புவதற்க்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்படுவோம்.