அண்மையில் மட்டக்களப்பு வவுணதீவு பொலீஸ் பிரிவிற்குட்பட்ட வலையறவு பொலீஸ் சோதனைச்சாவடியில் இனந்தெரியா நபர்களினால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தினால் இரண்டு பொலீஸ் கான்ஸ்டபிள்கள் கொல்லப்பட்டனர்.
இச்சம்பவத்துடன் சந்தேகநபர் என தொடர்புடையதாக கூறி தேசத்தின் வேர்கள் அமைப்பின் முன்னாள் போராளி இராசகுமார் என அழைக்கப்படும் அஜந்தன் சம்பவம் நடைபெற்ற மறுநாள் பயங்கரவாத தடுப்புப் பிரிவினரினால் கைது செய்யப்பட்ட நிலையில் விசாரணையின் அடிப்படையில் ஜனாதிபதியின் விசேட அனுமதியின் பேரில் 90 நாட்கள் பொலீஸ் தடுப்பு விசாரணை முன்னெடுக்கப்பட்டது.
90 நாட்கள் கடந்த 04.03.2019 ஆம் திகதி முடிவடைந்த நிலையில் விடுதலை செய்யப்படவில்லை இவரது விடுதலை தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்திருந்தார்.
இவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில் எனது கணவனை இந்த கொலைச்சம்பவத்துடன் தொடர்பு என கூறி கைது தெய்தனர் ஆனால் அவர் ஒரு நிரபராதி 90 நாட்கள் தடுத்து விசாரிப்பதற்கு ஜனாதிபதி உத்தரவுக்கடிதம் பிறப்பிக்கப்பட்டிருந்தது அதனடிப்படையில் கடந்த 04.03.2019 ஆம் திகதி முடிவடைந்த நிலையில் விடுதலை செய்யப்படவில்லை 05 ஆம் திகதி நீதிமன்றில் பாரப்படுத்துவதாக கூறினர் ஆனால் அவரை அங்கு கொண்டுவரவில்லை.
அன்றைய தினம் கூறினர் மீண்டும் ஒருமாத காலப்பகுதி தடுப்பு விசாரணைக்கான காலக்கேடு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக 90 நாட்கள் தடுப்பு விசாரணையின் போது கடிதம் மூலமாக அறிவித்திருந்தனர் ஆனால் இம்முறை எழுத்துமூலமாக கொடுக்கவில்லை தற்போது எனது கணவரை கொழும்புக்கு கொண்டு சென்றுள்ளதாக கூறுகின்றனர்.
இது தொடர்பாக நான் மனித உரிமை ஆணைக்குழு செஞ்சிலுவைச்சங்கம் ஆகியவற்றிடம் அறிவித்துள்ளேன் அவர்கள் இதற்குரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளனர் ஆனால் எந்த பிழையும் செய்யாத எமது கணவரை மீண்டும் தடுப்புக்காவலில் வைத்திருந்தால் நானும் எமது ஐந்து பிள்ளைகளும் ஜனாதிபதி அலுவலகம் அல்லது பொலீஸ் நிலையத்தின் முன்பாக நஞ்சருந்தும் நிலையாகவுள்ளது.
குற்றவாளி தண்டிக்கப்பட்ட வேண்டும் நிரபராதி விடுவிக்கப்பட்ட வேண்டும் எனது கணவர் வெளியில் இருந்த நேரம் அவரை வேலைக்காக பயன்படுத்தியவர்கள் நினைத்திருந்தால் அவரை விடுதலை செய்ய முயற்சி எடுத்திருக்கலாம் ஆனால் இப்போது அவர்கள் அனைவரும் கைவிட்டுள்ளனர்.
ஆகையினால் எனது கணவரின் விடுதலை குறித்து சர்வதேசமும் கவனத்தில் கொள்ள வேண்டும் இல்லையேல் எனது ஐந்து பிள்ளைகளுடன் நஞ்சருந்தும் நிலையே ஏற்படும் என மீண்டும் கூறிக்கொள்ள விரும்புகின்றேன். என அஜந்தனின் மனைவி கே. செல்வராணி கருத்துத் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.