வைரவிழா மலரின் தரம் மற்றும் ஆக்கங்களின் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்துகின்ற செயற்பாடுகளுக்காக வைர விழா மலர் பதிப்பாக்கக் குழுவினரின் கருத்துக்கள் மற்றும் ஆலோசனைகள் படைப்பாளிகளால் ஏற்றுக்கொள்ளப்படல் வேண்டும் எனப் பரிந்துரைக்கப்படுகிறது.
ஆவணப்படுத்தலின் முக்கியத்துவம் கருதி சுகவீனமுற்றவர்களும் வயது முதிர்வின் காரணமாக ஆக்கங்களை எழுத முடியாதுள்ளவர்களும் நேர்காணல் மூலமாக தங்கள் கருத்துக்களை ஆவணப்படுத்த விரும்பினால் பதிப்பாசிரியர் குழு அதற்கான நடவடிக்கைகளை எடுக்கும் என்பதனையும் இத்தால் அறியத்தருகின்றோம்.
ஆக்கங்கள் தட்டச்சு செய்யப்பட்டோ அல்லது கையெழுத்துப் பிரதியாகவோ அமைந்திருக்கலாம். தமிழ் அல்லது ஆங்கில மொழிகளில் ஆக்கங்கள் அமையலாம்.
படைப்புக்களின் வகைப்பாடு மற்றும் உள்ளடக்களின் தன்மைகளைப் பொறுத்து சான்றாதாரங்கள் மற்றும் உசாத்துணைகள் ஆக்கங்களில் உள்ளடக்கப்படுவது அத்தியாவசியமானது.
ஆக்கங்களின் தரமேம்பாட்டை உறுதிப்படுத்துகின்ற கடப்பாடு பதிப்பாக்கக்குழுவின் தலையாய கடமையாதலால், இலக்கண இலக்கிய வழுக்கள் ஆக்கங்களில் அவதானிக்கப்படுமிடத்து அவைகளை சீர்செய்யும் உரிமை பதிப்பாக்கக்குழுவிற்கு உண்டு.
ஆக்கங்கள் மற்றும் படைப்புக்களை அங்கீகரித்தல் மற்றும் நிராகரித்தல் என்பனவற்றில் பதிப்பாக்கக் குழுவின் முடிவே இறுதியானது.
ஆக்கங்கள் அனைத்தும் ஜுன் மாதம் 15ம் திகதியன்றோ அதற்கு முன்பதாகவோ கிடைக்கப் பெறல் வேண்டும்.
படைப்புக்களின் வகைப்பாடு: கட்டுரை கவிதை செய்தி கதை> ஓவியம்கேலிச்சித்திரம் மொழிபெயர்ப்பு உரையாடல்கள் புகைப்படங்கள். ஆய்வுகள் மற்றும் பொருத்தமான படைப்புவகைகள்.
ஆக்கங்கள் அனுப்பப்பட வேண்டிய அஞ்சல் முகவரி: (பதிவுத் தபால் விரும்பத் தக்கது) மு.முருகவேல் இல. 17. கங்காணிப் பிள்ளையார் கோயில் வீதி நாவற்குடா மட்டக்களப்பு.
மேலதிக தொடர்புகளுக்கு மு.முருகவேல்- 0777353437, காசுபதி நடராஜா 0773247132 கலாநிதி து.பிரதீபன் 0778436572 கி.கிரீசன் 0754324559.