எறிகணை தாக்குதலில் காலை இழந்த குடும்ப பெண்ணுக்கு இராணுவத்தின் யாழ். தலைமையகம் வீடு கட்டி கொடுப்பு

 

            

1996 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் இருந்து இடம்பெயர்ந்து நாவற்குழி வீட்டு திட்டத்தில் வசித்து வந்தபோது எறிகணை தாக்குதலில் ஒரு காலை இழந்த அரியாலை மேற்கை சேர்ந்த குமாரிராதா புவனேஸ்வரன் என்கிற குடும்ப பெண்ணின் வீட்டின் கட்டுமாண பணிகளை இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளை தலைமையகம் முழுமைப்படுத்தி கொடுக்க முன்வந்து உள்ளது.

யாழ். மாவட்டத்தில் உள்ள வறிய, வருமானம் குறைந்த, போரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துகின்ற வேலை திட்டங்களின் கீழ் இராணுவத்தின் யாழ். மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சியின் அறிவுறுத்தலுக்கு அமைய இப்பெண்ணின் வீடு முழுமைப்படுத்தி கொடுக்கப்படுகின்றது.
வறிய, வருமானம் குறைந்த, போரால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை சேர்ந்த பாடசாலை பிள்ளைகளுக்கு யாழ். கட்டளை தலைமையகத்தில் வைத்து கடந்த வாரம் சைக்கிள்கள் வழங்கி வைக்கப்பட்டபோது இதில் குமாரிராதாவும் நேரில் பங்கேற்றார். இவரின் கோரிக்கையை நேரடியாக மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சியிடம் முன்வைத்தார்.
கடந்த 20 வருட காலத்துக்கும் மேலாக வீட்டின் கட்டுமாண பணிகளை முழுமைப்படுத்த முடியாமல் உள்ளார் என்றும் கட்டி முடிக்கப்பட்டாத வீட்டில் வசிக்க முடியாமல் இரவில் காணி ஒன்றில் குடிசையில் வாழ்கின்றார் என்றும் சொந்த வீட்டில் குடியேறி வாழ வேண்டும் என்பதே இவரின் அபிலாசை ஆகும் என்றும் தளபதிக்கு தெரிவித்தார்.
இவரின் வேண்டுகோளை ஏற்று கொண்ட யாழ். மாவட்ட கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் தர்ஷன ஹெட்டியாராச்சி இவரின் விபரங்களை ஆவணப்படுத்தியதுடன் இவருடைய கட்டி முடிக்கப்படாத வீட்டை நேரில் பார்வையிட்டு  பூர்வீக நடவடிக்கைகளை உடன் ஆரம்பிக்குமாறு சம்பந்தப்பட்ட இராணுவ அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Related posts