மட்டக்களப்பு கல்லாறு விளையாட்டுக் கழகம் தனது 50 ஆவது ஆண்டு நிறைவை அடையாளப்படுத்தும் வகையில், பேருந்து தரிப்பிடமொன்றை நிறுவி அதனைத் திறந்துவைக்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது
மூத்த கழகமான ‘கல்லாறு விளையாட்டுக் கழகம்’ பிராந்தியத்தில் விளையாட்டு மட்டுமின்றி கல்வி மற்றும் பொதுச் சேவை வடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகின்றது.
இந்த வகையில் பெரியகல்லாறு ஆயுர்வேத வைத்தியசாலைக்கு வரும் நோயாளர்களைக் கருத்தில் கொண்டு அவ்விடத்தில் மேற்படி பேருந்து தரிப்பிடம் அமைக்கப்பட்டிருப்பது அனைவராலும் வரவேற்கப்படுகின்றது. இப் பேருந்து தரிப்பிடத்திற்கான அனுசரணையினை சுவிஸ் நாட்டில் வசிக்கும் திருமதி சந்திரசேகரம் மனோன்மணி குடும்பத்தினர் வழங்கியிருந்தனர்.
திறப்பு விழாவில், ம.தெ.எ.பற்று தவிசாளர், சபை உறுப்பினர்கள், பெரியகல்லாற்றின் விளையாட்டுக் கழகங்கள், ஆலயங்களின் பிரதிநிதிகள், ஊர்ப் பிரமுகர்கள், கழக உறுப்பினர்கள் என பெருமளவானவர்கள் கலந்து கொண்டனர்.