நாட்டுக்காக ஒன்றிணைவோம் என்ற தொனிப் பொருளில் ஜனாதிபதி செயலகத்தினால் செயல்படுத்தப்படும் ஒருங்கிணைந்த அபிவிருத்தி திட்டங்களின் ஓர் அம்சமாக சத்துருகொண்டான் ஓசாணம் வீதியானது கொங்றிட் வீதியாக அபிவிருத்தி செய்யும் பணிகள் நேற்றைய தினம் ஆரம்பித்து வைக்கப்பட்டன.
கிராம சக்தி வேலைத் திட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட மேற்படி வீதியானது குறித்து ஒதுக்கப்பட்ட மாகாண சபை நிதியின் ஊடாகவும் மாநகர சபையின் சொந்த நிதியின் மூலமாகவும் கொங்கிறீற்று வீதியாக புனரமைக்கப்படவுள்ளது.
சுமார் 9.5 மில்லியன் ரூபாய் செலவு மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படவுள்ள இவ்வேலைத்திட்டத்தினை மட்டக்களப்பு மாநகர முதல்வர் தியாகராஜா சரவணபவன், பிரதி முதல்வர் க.சத்தியசீலன், வேலைகள் குழுதலைவர் த.இராஜேந்திரன், மாநகர சபை உறுப்பினர் ரகுநாதன் ஆகியோர் ஆரம்பித்து வைத்தனர்.