மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சீயோன் தேவாலயத்தில் ஞாயிற்றுக்கிழமை(21) காலை 9.00 மணியளவில் வழிபாட்டில் ஈடுபட்டுக் கொண்டிருந்த பொதுமக்களை இலக்கு வைத்து இனந்தெரியாதவர்களினால் நடாத்தப்பட்ட கிளைமோர் குண்டுத்தாக்குதலில் 26பேர் உயிரிழந்துள்ளார்கள்.75பேர் காயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிசிச்சை பெற்று வருகின்றார்கள்.
இவ்வாறு சிசிச்சை பெற்று வருபவர்களுக்கு குருதிப் பாய்ச்சுவதற்கு அவசரமாக இரத்தம் தேவைப்படுகின்றது.
கிறிஸ்தவம் மதத்தினை சேர்ந்தவர்கள் இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை தமது வழிபாட்டில் ஈடுபட்டு வந்தார்கள்.
இதன்போது சரியாக 9.00 மணியளவில் பாரிய வெடிச்சத்தம் ஏற்பட்டு மட்டக்களப்பு நகர மக்களை அதிர்ச்சிக்குள்ளாகியிருந்தது.
குண்டு வெடிப்பு ஏற்பட்ட இடத்தில் பொதுமக்கள்,உறவினர்கள்,முப்படையினர்,மாவட்ட அரசாங்க அதிபர்கள்,மட்டக்களப்பு மாநகரசபை ஊழியர்கள் உதவியுடன் தீயணைத்து காயப்பட்டவர்களையும்,சடலங்களையும் மீட்டெடுத்தார்கள்.
மனித உடல்கள் பாரியளவில் தேவாலயத்தைச் சூழவுள்ள பிரதேசங்களிலும்,வீடுகளிலும் வீசப்பட்டுள்ளது.இக்குண்டு வெடிப்பினால் அருகாமையில் உள்ள வீடுகளின் சுவர்கள்,சுவரில் உள்ள கண்ணாடிகள் சுக்குநூறாக உடைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மீட்புப்பணியில் பொலிசார்,இராணுவத்தினர்,விமானப்படையினர்,இளைஞர்கள் ,மீட்புப்பணியை மேற்கொண்டு வருகின்றார்கள். இதேவேளை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பொதுமக்கள் நிரம்பி வழிகின்றார்கள்.
குண்டு வெடித்தவுடன் 45நிமிடங்கள் கருமையான புகையுடன் தேவாலயம் எரிந்து கொண்டிருந்தது.உடல்கள் கருகியநிலையில்தான் சடலங்கள் மீட்கப்பட்டது.3 Attachments