நாட்டில் அண்மையில் இடம்பெற்ற வன்செயல்கள் காரணமாக சந்தேகத்தின் பேரில் 100 பேரை கைது செய்துள் ளதாக தெரிவித்துள்ள பொலிஸார், அவர்களில் அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் பணிபுரிபவர்களும் அடங்குவதாகவும் இவர்களுக்கெதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்.
வடமேல் மாகாணத்தில் மினுவாங்கொடைபகுதியில் இருந்த முஸ்லிம்களின் சொத்துக்களுக்கு பெரும் சேதம் விளைவிக்கப்பட்டிருந்தது.இதில் ஒருவர் உயிரிழந்திருந்தார்.
இந்த வன்முறைச்சம்பவங்களை அடுத்து கருத்து தெரிவித்தா பொலிஸ் பேச்சாளர் றுவான் குணசேகர,
சந்தேகத்தின்பேரில் கைதுசெய்யப்பட்டவர்களில் அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் பணியாறற்றுபவர்களும் உள்ளடக்கம்.இவர்களின் கைது தொடர்பில் அந்ததந்த நிறுவனங்களுக்கு தெரியப்படுத்தப்படும்.
ஏதாவது வன்முறையை தூண்டும்விதமாக அரச மற்றும் தனியார் பணியாளர்கள் செயற்படுபவர்களாக இருந்தால் அவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்டும் எனவும் தெரிவித்தார்.