பயங்கரவாதத்துடன் தொடர்புடையவர்களாக குற்றஞ்சாட்டப்பட்டுள்ள அமைச்சர் ரிஷாட் பதியுதீன் மற்றும் கிழக்கு ஆளுநர் ஹிஸ்புல்லா, மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி ஆகியோரை பதவி விலகுமாறு வலியுறுத்தி ஜாதிக ஹெல உறுமயவின் நாடாளுமன்ற உறுப்பினர் அதுரலிய ரத்தன தேரர் உணவு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றார்.
அவர் இன்று (வெள்ளிக்கிழமை) காலை முதல் கண்டி தலதா மாளிகைக்கு முன்பாக உணர்வு தவிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.
கடந்த மாதம் 21ஆம் திகதி உயிர்த்த ஞாயிறு தினத்தன்று இலங்கையின் பல இடங்களில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதல்கள் காரணமாக 250இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்திருந்தனர். அத்தோடு பலர் காயமடைந்திருந்தனர்.
இந்த தாக்குதல்களை மேற்கொண்ட பயங்கரவாதிகளுடன் முஸ்லிம் அரசியல் தலைவர்களுக்கு தொடர்புள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்டிருந்தது. இந்நிலையிலேயே அவர்களை பதவி விலக்குமாறு வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்.