கிழக்கு மாகாணத்திலுள்ள சில கல்வி வலயங்களால் மேற்கொள்ளப்படும் மனித கௌரவத்துக்கு சவாலான செயற்பாடுகளால் அதிபர்கள், ஆசிரயர்கள் கடும் மன உளச்சலுக்கு உட்பட்டுள்ளதனால் மகிழ்ச்சியானதும், தரமானதுமான கல்விச் செயற்பாடுகள் பாத்படைந்துள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் பொன்னுத்துரை உதயரூபன் குற்றம் சாட்டியுள்ளதோடு ஊடகங்களுக்கு அறிக்கையொன்று அனுப்பியுள்ளார்.
கிழக்கு மாகாணத்திலுள்ள மாகாண, கல்வி வலயங்களால் தரமான கல்விச் செயற்பாடுகளுக்காக அதிபர்கள், ஆசியர்களுக்குரிய தொழில் வாண்மை விருத்திக்கான முன்னெடுப்புக்கள் செயற்படுத்தப்படாமல் கடந்த கால பரீட்சைப் பெறுபேறுகளை மீளாய்வு செய்வதிலும், பரீட்யைப் போட்டியாகக் கொண்ட தேசிய கல்விக் கொள்கைக்கு முரனான கல்விச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாக குற்றம் சாட்டியுள்ளார்.
கல்வி வலயங்களின் பணிப்புரைகளுக்கு அமைவாக அதிபர்கள், ஆசியர்களின் சேவைப் பிரமான குறிப்புகளுக்கும், தாபன விதிக் கேவைகளுக்கும் முரனான விளக்கங்கள் கோரப்படுவதோடு பல அதிபர்கள், ஆசிரயர்களின் அடிப்படை உரிமை மீறும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுவதாகவும் குற்றம் சாட்டியுள்ளார்.
குறிப்பாக கிழக்கு மாகாணத்தின் கல்வி நிர்வாக கட்டமைப்பு சீர் குலைந்துள்ள நிலையில் அதிகாரிகளால் ஆசிரியர்களுக்கு விளக்கம் கோரப்பட்ட ஏராளமான கடிதங்கள் அனுப்பப்படுவதோடு, சில அதிபர்களால் ஆசிரயர்கள் முதலாம் தவனைக்குரிய கல்வி தொடர்பான விடயங்கள் இரண்டாம் தவனையில் கோரப்பட்டுள்ளமை கிழக்கு மாகாணத்தின் வினைத்திறனற்ற கல்வித் தலைமைத்துவத்தை சுட்டிக்காட்டியுள்ளதாக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
மேலும் கடந்த காலங்களில் கிழக்கு மாகாண கல்வியமைச்சர் ஓவ்வு பெற்ற நிலையில் இரண்டாம் நிலை சம்பளம் பெறும் அதிகாரியாக செயல்பட்டமையும், கிழக்கு மாகாணத்தின் கல்வி வீழ்ச்சிக்கு வகைசொல்ல வேண்டிய நபர் ஆவர். உள்நாட்டு சிவில் யுத்தத்திற்கு பின் வட, கிழக்கு மாகாணங்களின் சமூக, பொருளாதார, கலாச்சார உரிமைகள் மீது பெரும் தாக்கத்தினை ஏற்படுத்தும் கல்வி அபிவிருத்தியில் வடகிழக்கு மாகாண கல்வியமைச்சு கவனம் செலுத்தவில்லை எனவும் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.