ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த 4 வருடத்தில் அவரின் நான்கு குணங்களை வெளிப்படுத்தியுள்ளார் என நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவிப்பு.
தான் ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்திருந்தால், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தன்னை 6அடியின் கீழ் அடக்கம் செய்திருப்பார் எனக்கூறியமை உள்ளிட்ட நான்கு குணங்களை ஜனாதிபதி இந்த 4 வருடத்தில் வெளிப்படுத்தியதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.ஸ்ரீநேசன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு – விளாவட்டவான் பிரதேசத்தில் நேற்று திங்கட்கிழமை(10) இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு கூறினார்.
இங்கு மேலும் தெரிவித்த அவர், “ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கடந்த 4 வருடத்தில் அவரின் நான்கு குணங்களை வெளிப்படுத்தியுள்ளார்.
முதலாவது குணம் தான் ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்திருந்தால், முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தன்னை 6 அடியின் கீழ் அடக்கம் செய்திருப்பார் எனக் கூறியமை. அவரது 2ஆவது குணம் தன்னை கொலை செய்துவிடுவாரென கூறிய மஹிந்தவை பிரதமராக்கியமை ஆகும்.
அதேபோல் அவரது 3ஆவது குணம், ஐக்கிய தேசியக் கட்சியும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியும் முரண்படும் சமயத்தில் மஹிந்த ராஜபக்ஷ மீண்டும் ஆட்சியைக் கைப்பற்றி விடுவதாகக் கூறியமை. 4ஆவது குணம் ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிட மாட்டேனென கூறியமை.
இவ்வாறு ஜனாதிபதி கடந்த 4 வருடங்களில் 4 குணங்களை வெளிப்படுத்திவிட்டார். இனிமேலாவது அவர் தனது ஆட்சியை சரியான முறையில் முன்னெடுக்கவேண்டும்” என மேலும் தெரிவித்துள்ளார்.