யுத்தம் இடம்பெற்றாலும் அன்று நாட்டில் அபிவிருத்தி வேகமாக இருந்தது – முன்னாள் ஜனாதிபதி!

விடுதலை புலிகளுக்கிடையிலான யுத்தம் இடம்பெற்ற போதும் கூட தனது ஆட்சிக் காலத்தில் வேகமான அபிவிருத்தி இடம்பெற்றதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்துள்ளார்.

அநுராதபுரம் பிரதேசத்தில்  (வெள்ளிக்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு கூறினார்.

6 ஆண்டுகளாக யுத்தம் நடைபெற்ற போதும் கூட அன்றைய காலகட்டத்திலும் தனி நபர் வருமானம் மூன்று மடங்காக அதிகரித்ததாக அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன் அன்று நாட்டின் தேசிய உற்பத்தியை அதிகரித்ததாகவும், மேலும் தனது ஆட்சிக் காலத்தில் யுத்தத்தையும் குறிப்பிடத்தக்க அளவு முடிவுக்கு கொண்டு வர முடிந்தது என்றும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.

தற்போது இலங்கை பொருளாதாரம் நிலைமை வீழ்ச்சியடைந்து காணப்படும் நிலையில், டொலருக்கான இலங்கை பெறுமதி வீழ்ச்சியை சந்தித்த நிலையில் அவர் இக் கருத்தை முன்வைத்துள்ளார்.

Related posts